நீர்க்கோடு!!!

பொன்னி என்பதொரு பெரும் நீர்க்கோடு
அதன் தண்ணி பிரிக்கும் வழக்கோடு
சில பல பேரின் ஆணவ செருக்கோடு
உனக்கும் எனக்கும் நடுவில் வந்ததொரு நீர்க்கோடு

கண்ணீர் கரைகளில்
காதல் கடிதமெழுதி
கன்னட காற்றில் கரைந்து விட்டேன்…
கரைவந்து சேர்ந்ததோ கண்ணனிடம்…