இதயத்தில் ஒருபாதி இரவல்கொடு…

கவிதைத்தொழில் செய்து வந்தவள்…
காதல் துயிலில் விழுகிறேனோ…
உண்மையென்று நீயுணர்ந்து கொண்டால்…
உன்சுவாசத்தின் ஒருபாதி இரவல்கொடு…
உன்நினைவுகளை கனவுவழி இரவில்கொடு…
நித்தம் சத்தமாய் யுத்தம் செய்யும் இதயத்தில்…
நிசப்தம் நெய்துகொடு…
நீண்டுசெல்லும் குழப்பத்திற்கு முடிவுகொடு…
நீட்சிபெற்ற இரவுகளுக்கு விடிவுகொடு…
விக்கிக்கொள்கிறேன்...
திக்கிக்கொள்கிறேன்…
விழிநீர்த்திரை மறைவிலே உனைக்காண்கிறேன்…
பிறப்பிடம் விட்டு உன்னிடம் உறைகிறேன்…
பிற்பாதியின்ப துன்பம் பங்குகொள்ள…
உன்பதில் என்னவோ
முண்டாசு தரிக்கா என் பாரதியே….