இரக்கமில்லா உறக்கம்…..

கண்கொட்டாது விழித்திருக்கிறேன்…

காரணமேதும் தோன்றவில்லை…

கன்றிப்போன கண்ணுக்குள்ளே கனவுகள் வளர்த்து

காடுமேடு அலைந்து திரியும் சீருடைக்காரனுக்கு…..

சேலைத்தலைப்பில் குழந்தையைச் சுற்றி

சேற்று மழையில் அமர்ந்திருக்கும் அந்த தாய்க்கு….

நொடிக்கு நொடி விழுந்து

பொடிப்பொடியாக்கும் குண்டுகளின் ஓசையில்

பதுங்குகுழியில் உறைந்திருக்கும் அந்த பிள்ளைக்கு…

இவர்யாவர்க்கும் சிறுகக் கசியுமிந்த உறக்கம்

இம்சையாய் எனக்கு வகுப்பறையில் வந்தேனோ வதைக்கிறது….