நினைவோ ஒரு பறவை
பின்னிரவில் வரும் பிறைநிலவில்…
குளிருக்கென சிறகொடுக்கும் பெண்பறவை…
கண்ணீர் வெள்ளம் கரம்பட்டு குளிர்மிக…
தண்ணீர் மெல்ல புகுந்ததுவோ என பயம்மிக…
விண்ணில் முளைத்த பூக்களும்…
அதுஉதிர வலிக்காமல் ஏந்தும் ஓடையும்…
அதுவாய் காற்றில் சரசரக்கும் ஆடையும்…
நிசப்தம் கிழித்து நீயில்லையென நினைவூட்ட…
குளிர் உறையும் நிலவில் தளிர் உறைய…
நானும் உறைந்தேன் நினைவலைகளில்…
நின்கரம் பற்றிட நீள்தினம் போக்கியே…
நீந்திவந்திடுவேன் காலங்களில்…
அதுவரை பொறு மனமே….
அமைதிகொள் மனமே…