எண்திசை மலர் சேர்ந்த பூந்தோட்டம்….
எல்லாம் மணமும் கலந்து வீசுது தென்றலாய்…

அன்னை மடியின் ஏக்கத்தை போக்கிட
ஆயிரம் தோள் கிடைத்தது சாய்ந்திட

துளி கண்ணீர் சிந்தினாலும்
துடைத்திட எண்ணற்ற விரல்கள்

பாடம் மட்டுமல்ல… சொல்லாமலேகூட
என் மனமும் படிக்கத் தெரிந்தவள்….தென்றல்…

என் எழுத்தின் முதல் வாசகி
என் மனக்கருத்தின் புகலிடம்
தோல்வியில் என் மனம் வருடிய மயிலிறகு…
தென்றல்…

மனம் தளர்ந்த இரவுகளில்
நிலாச்சோறு ஊட்டிய அன்னைகள் ஏராளமிங்கே…
சந்தோஷ தருணங்கள்…
அதுபோல் கிடைப்பது வேறெங்கே…

சிறகுகள் இல்லா தேவதைகள் நாங்கள்
இருந்ததுவோ…
தென்றல் அன்னையின் கருவறையில்….