காண்பது கண்ணகியோ…

நீண்ட கரிய கூந்தல் கற்றைகள் காற்றில் புறள…

அந்திச் சூரியன் தன்பங்கிற்கு அதில் மஞ்சள்பூச…

மஞ்சள் குங்குமம் தவிற்கப்பட வேண்டியதாய் எண்ணி…

தன்ஒற்றை தலைச்சிலுப்பலில்…

கதிரவனை விரட்டிவிட்ட தோரணையில்…

புன்னகை புகமுடியாத இறுக்கமான இதழ்களை ஈரப்படுத்தியபடியே…

பல நூற்றாண்டுகள் ஈரத்தில் ஊறி பச்சைபூத்திறுக்கும் பாறையின்மேல்…

பல்லாயிரம் ஆண்டாய் நீரோட்டத்தில் அமிழ்ந்து…

பசுமை படர்ந்த பூமியில்…

எத்தனை யுகமாய் அமர்ந்திருக்கிறாயோ யுவதியே… யௌவனம் மாறாமல்…

மதுரையையெரித்த கனலின்னும் சுடருதோ உன் கண்ணில்…

விடைபகர்வாயோ தரிசுவிழி சிறிதாய் அசைத்தேனும்…