நிலவே… முகம் காட்டு….

வானத்து வெண்ணிலவே…
குறைகள் கண்டு பழிக்கும் இவ்வுலகம்….
உன் கறைகள் கண்டு பழிக்குமென்றா முகம் பூட்டினாய்…
மேகம் கொண்டு முகமறைத்தாய்…
பின்பு புன்னகைகளை ஏன் விண்மீன்களாய் விட்டுச்சென்றாய்….
கறைகள் இல்லா காகிதம் காவியமாவதில்லை…
எனில் நீயே எங்கள் இரவுக்காவியம்…
இல்லையில்லை…
இவ்வுலகம் நிறைவுக்கும் நீயே காவியம்….
தூற்றல்கள் கண்டு அஞ்சினால்…
வெற்றித்தூரல்கள் என்றும் நனைக்காது…
எனவே…
நிலவே…
முகம் காட்டு…