கனவுகள்…

விரல் வழி மின்சாரம் வழிகிறது…
விண்ணில் ஏவுகணை பாய்கிறது…
காரணமெல்லாம் கனவுகள்…

குளிர் போக குகை கண்டதும்…
அதுபோக புகை கண்டதும்…
யாரோ ஒருவன் கனவுகள்…

காடு வழி நடந்தவனை காரில் ஏற்றியதும்…
கரியமிலம் பெருக்கி நெரிசல் வளர்த்த்தும்…
இன்னொருவன் கனவுகள்…

தொலைதூரம் சுருக்க இணையம் வளர்த்ததும்…
சிட்டுக்குருவிகள் செத்துப்போக
செல்போன் கோபுரம் அமைத்ததும்…
வேறொருவன் கனவுகள்…

என்திறமெல்லாம் கொட்டி எந்திரம் படைக்கிறேன்…
என்றோ எனையாள செங்கோல் எடுக்குமென்றறியாமல்…

விண்மீன் பறிக்க ஏவுகணை தொடுக்கிறோம்…
வானம்தொட பாலம் அமைக்கிறோம்…
மனப்பாலங்கள் புணரமைப்பை யாசிக்கின்றன…
கொஞ்சம் யோசிப்போம்…..