நீயும் நானும்…

எழுதிட கரையுமென் பென்சில் முனைபோல்

உனை நினைத்திட உருகும் நான்…

நீண்ட நாட்களாய் நீயாய் இருந்து…

நிமிடங்கள் மட்டுமே நானாய் ஆகிறேன்…

நெடிய பெருமூச்சுகள் உதிர்த்துக்கொண்டே…

காற்றில் உனைத்தேடி அலைகிறேன்…

விழித்திருக்கையில் நினைவுகளாய்…

களித்திருக்கையில் மனப்புனைவுகளாய்…

கனவுக்குள்ளேயொரு பாடலாய்….

கையோடு கலந்திடும் காதலாய்….

நீட்டிய விரலில் தொற்றிக்கொள்ளும்….

நீயுமோர் கிளிப்பிள்ளையோ….