விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 9

Pratheba Pratheba Follow Jul 31, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 9
Share this

அவர்கள் பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் ஆதர்ஷ் வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

அனன்யா அப்பா உள்ளே நுழையவும் அந்த சம்பாஷணை முடியவும் சரியாக இருந்தது. அவன் தன் கைபேசியை பார்ப்பதாய் பாவனை செய்திருக்க.. அனன்யாவும் உள்ளே வந்து அவள் அப்பாவோடு சோபாவில் அமர்ந்தாள்.

இருவருக்கும் வெவ்வேறு மனநிலை… அதனால் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. நிமிர்ந்து சிறு புன்னகையை படரவிட்டதோடு அவள் குனிந்துகொண்டாள். அவனும் அவள் அப்பாவும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

பின் அவன் “சரி அங்கிள் நான் கெளம்பறேன்… அப்பாவ உங்ககிட்ட கலந்துக்க சொல்றேன்… அப்புறமா பாக்கலாம்… வரேன் ” என்றான்.

“முதமுறையா வீட்டுக்கு வந்திருக்கீங்க… சாப்பிடாம போகக்கூடாது தம்பி… இந்த பார்மலிட்டி லாம் பாக்க வேணாம்… இதும் உங்க வீடு தான்… டிபன் செஞ்சுட்டேன்… சாப்பிட்டு கிளம்பலாம்…” அமுதாம்மா கிச்சனில் இருந்து அவசரமாக ஓடிவந்து பேசினார்.

அவர் கணவரும் அதை ஆமோதிக்க, ஆதர்ஷ் அதிகம் மறுக்காமல் சாப்பிட்டுவிட்டு வந்தான்… அவ்வளவு குறைந்த நேரத்தில் நிறைய உணவுகள் செய்திருந்தார் அவன் அம்மாவைப்போலவே…

பின் சிறிது நேரத்தில் அவன் கிளம்பிவிட்டான். அனன்யா தானும் அன்று வெளியில் செல்லவேண்டியிருந்ததால் வீட்டில் சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்தை அடைந்தாள்.


அங்கே அவளுக்காகவே காத்திருந்தான் நம்ம பையன்….

இதை அனன்யா எதிர்பார்க்கவே இல்லை…

“நேத்து உன்கிட்ட எவ்ளோ சொன்னேன் அனு… என்கிட்ட உன் மனசுல இருக்கத சொல்றதுக்கு உனக்கு ஏன் அவ்ளோ தயக்கம் ???” என்றான் சட்டென்று.

இவன் எதைப்பற்றி பேசுகிறான் என்று புரியாமல் அனன்யா விழிக்க….

“உனக்கு படிப்பு முக்கியம்னு எனக்கும் தெரியும்… அது கெட்டுப்போக நான் விடமாட்டேன்… இது என் மேல ப்ராமிஸ்… ” என்றான் ஆதர்ஷ்.

“அச்சச்சோ…

அதுவா…

தப்பா எடுத்துக்காதீங்க….

இப்போதான் எல்லாம் புரியுது…

நேத்து தானே பாத்தோம் அதுக்குள்ள எப்படி உங்ககிட்ட சொல்றது…” என்றாள் அனன்யா தயங்கியபடி…

“சரி போனது போகட்டும்… வா போகலாம்…” என்று தன் காரை நோக்கி நடந்தான்…

“ஓஹோய்…

என்ன…

நீங்க பாட்டுக்கு என்னமோ கல்யாணம் பண்ணி குடுத்திட்ட மாதிரி வான்னு சொல்லிட்டு போறீங்க… !!! அதிக்கெல்லாம் நாள் இருக்குதாக்கும்… !!!! ” என்று குரலில் கொஞ்சம் சுதியேற்றினாள்.

அவன் அவளிடம் ஒரு கடிதத்தை நீட்டினான்.

“என்ன அதுக்குள்ள லவ் லெட்டரா…??” சிரித்தாள் அனன்யா.

“ஹேய்…

நீ என்ன பத்தி என்ன தான் நெனச்ட்டு இருக்க…!!!!

ஒழுங்கா என்னன்னு பிரிச்சு படி…!!! அப்புறம் பேசு தாயே !!!” என்றான் பொய்க்கோபத்துடன்…

அந்த காகிதத்தை பிரித்து படித்ததும் அவளுக்கு தலைகால் புரியவில்லை…

“ஊஊஹ்….” என்று சிறிதாய் வியப்பிற்கான ஒலியும் வெளிப்பட்டது…

ஆதர்ஷ் - என்ன அனு… லவ் லெட்டர படிச்சுட்டியா…??? நான் இப்போ பேசலாமா…!!!!

அனன்யா - ஹையோ… என்னங்க இது… நம்பவே முடில… ரொம்ப தேங்க்ஸ்… இது லவ் லெட்டர் இல்ல… லெட்டர் வித் லவ்….

அவன் அனு, அணுவும் அசையாமல் அவனையே பார்த்தாள். கண்ணெல்லாம் புன்னகைத்தது அவளுக்கு…..

ஆதர்ஷ் –உங்க அப்பாகிட்டயும் பேசிட்டேன். உனக்கு விருப்பம் தானே…!!!

அனன்யா - ஹேய்… யூ ஆர் சோ ஆசம் யா… விருப்பம் இல்லாமயா… !!!! எப்போ கிளம்பலாம்…??? (கிட்டத்தட்ட குதித்துக்கொண்டு அவனருகில் வந்துவிட்டாள்)

ஆதர்ஷ் – ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நிபந்தனை….!!!!!

அனன்யா - என்ன.. என்ன…? (மைண்ட் வாய்ஸ்…. பிரியமாவளே விஜய் மாதிரி ஏதும் அக்ரீமெண்ட் வச்சிருப்பானோ ???)

“நீ எனக்கு ஐ லவ் யூ சொல்லணும்” குரும்பாய் கண்ணிமைத்தான்….

இரண்டடி பின்னால் தள்ளிப்போய் “எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க தானே போறோம்…

அப்புறம் பாப்போம்…

இப்போல்லாம் சான்ஸ் இல்ல தம்பி” அவளும் குரும்புடன் பதில் சொன்னாள்.

“ம்ம்ம்ம்….

பாக்கலாம் அனு குட்டி…

நீ சொல்லாட்டாலும் நான் சொல்லுவேன்……..

ஐ லவ் யூ…!!!!!!!!!!!!” என்று கைகள் விரித்தான்.

“எது……????

இந்த குட்டி…கிட்டி லாம்…

ஐ டோன்ட் லைக் !!!!

தெரிஞ்சுக்கோங்க…!!!!” கோபமாக திரும்பி, இந்தப்பக்கம் அவள் முகம் சிவந்தாள் நாணத்தால்…..

“சரி டீ என் கோவக்காரி…

டாட்டா…

இத சொல்ல தான் வந்தேன்…

வீட்ல கேட்டு சில வேலைகள சேர்த்து வாங்கிட்டு வந்துட்டேன்…

கெட் ரெடி பார் தி த்ரில்…” சொல்லிவிட்டு காரில் ஏறினான்.

அந்த சாலை வளையும் வரையில் பக்க கண்ணாடியில் அவளை பார்த்துக்கொண்டே மெதுவாக சென்று திரும்பினான்.

அவளும் அவன் வாகனம் கண்ணை விட்டு மறையும் வரை இமைக்காமல் பார்த்திருந்தாள்.


இரண்டு நாட்கள் சென்ற பிறகு, நிச்சயதார்த்தத்திற்கு உடைகள் வாங்கினர்… இவளுக்கு மெரூன் நிற புடவையும் அவனுக்குப் பட்டு வேட்டி சட்டையும்…

வற்புறுத்தியும் கோட் சூட் எடுக்க அவன் மறுத்துவிட்டான்…

அவ்வப்போது விழியீர்ப்புவிசை அங்கே செயல்பட்டதை நானு சொல்லனுமா என்ன உங்களுக்கு…???


“மதுரை அண்ணா நகர் முதல் தெருவில் வசிக்கும் பொன்மாறன் – வித்யா இணையர் தம் செல்வ குமாரன் ஆதர்ஷுக்கும், அதே மதுரை பாண்டி கோயில் தெருவில் வசிக்கும் பாண்டியன்- அமுதா இணையரின் செல்வ குமாரி அனன்யாவுக்கும் திருமணம், மேற்படி பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது….” என்று ஒருவர் முழங்க… இதயங்கள் மகிழ்கின்றன….

இப்போ பாத்தீங்கன்னா… நம்ம ஹீரோ சார் ஹீரோயின பாத்துட்டே சிரிச்சிட்டு இருக்க… ஹீரோயின் கண்ணுல ஒரே ஆனந்த கண்ணீர்…

“இப்பொ இவ அழுவா, இதே அடுத்த வருஷம் பாருங்க… பையன் தான் அழப்போறார்..!!” என்ற ரேஷ்மாவை போடி என்று சொல்லி கொஞ்சம் வெட்கம் என்று நினைத்து அனன்யா ஏதோ செய்ய… இப்படியே பலவாறு குரும்புகளுடன் மிக நன்றாய் நகர்ந்தது நேரம்…

இரண்டு வீட்டாரும் சொந்தங்களும் சூழ அனன்யா வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது…..

அனுவுக்கு…. சாரிங்க… அனன்யாவுக்கு அவனோடு திருமணம் என்று நினைக்கும்போதே…. மகிழ்ச்சி மழைபோல் நனைத்தது.

அவன் தன்னை எவ்வளவு புரிஞ்சுவச்சிருக்கான்… தனக்கு பிடிச்சதை எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறான் என்று ஒரே வியப்பு…

நாளுக்கு நாள் காதலும், கூடவே மிக நல்ல நட்பும் உருவானது…

காதலில் முதல் படி நம்பிக்கை…

அவன் இவள நடத்தும் விதமும், அவன் அன்பும் ஆதர்ஷ் மேல அவளுக்கு பல மடங்கு நம்பிக்கை வர காரணமாச்சு….

அவன் அவளுக்கு ஆதர்சமானான்…. அவள் அவன் நெஞ்சின் ஆனந்தமானாள்…..

இருவரும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பயணத்திற்காக தங்கள் நாட்களை வேகமாக நகர்த்த பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.

எங்க போகபோறாங்க…. ????

தொடரும்…..

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments