விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 8

Pratheba Pratheba Follow Jul 29, 2020 · 2 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 8
Share this

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்

மான்கட் காலதர் மாளிகை இடங்களும்

கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்

பயனற வறியா யவனர் இருக்கையும்

கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்

கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்

என்ன… பாட்ட முழுசா படிக்காமயே இங்க வந்துட்டீங்க தானே… போய் படிச்டு வாங்க… அப்போதான் மீதி கதை சொல்லுவேன்….

பெரிய பெரிய கட்டிடங்கள் சூழ்ந்திருந்த… ஐரோப்பியர் மற்றும் பல நாட்டினர் தங்கியிருந்து வாணிகம் பெருமளவில் நடந்த இடம்னு சொன்னா யாருமே இப்போ நம்பமுடியாத பூம்புகார் நகரம் பற்றிய சிலப்பதிகாரத்தில் வரும் பாடல் இது…..

படிச்சாச்சா…!!!!!!

இது ஏன் இங்கன்னு பாத்தீங்களா… !!!!!!

தெரிஞ்சுக்கணும்னா ரெண்டு வருடம் பின்னோக்கி போகணும்………

மேல சொன்ன அந்த பாட்ட அவ சத்தமா ரேஷ்மாகிட்ட சொல்லி அதோட அர்த்தமும் சொல்லிட்ருந்தா….

கடல் அலைகள் தூரமா ஒரு அழகான ஆர்கெஸ்ட்ரா நடத்த… இவ பாடம் நடத்த… இவர்களைக் கடந்து சென்ற ஆதர்ஷ் விழிவிரித்து திரும்பினான்….

மனசும் உடம்பும் ஒருசேர பறக்கிற மாதிரி தோணுச்சு அவனுக்கு…

அவன் பாத்தது அதே கண்கள்…

அவளே தான்…

எத்தன நாள்…

ரெண்டு வருஷம்…

சரி மறந்துடலாம்னு நெனச்சு பிரெண்ட்ஸ் ஓட ட்ரிப் வந்தா…

இங்க வந்து நிக்கிறா….

நண்பர்கள் பீச்சுக்கு விளையாட கூப்ட்டாலும் போக மனசில்லாம ஒன்னுமில்லாத அந்த கண்ணகி மணிமண்டபத்த சுத்திவந்தான்….

அந்த பொண்ணுங்க பீச் பக்கம் போனதும், “இப்போ வாங்கடா போலாம்…” என்று காண்டாகி ஒரு மூலையில் உக்கார்ந்திருந்த அவனோட பிரண்ட்ஸ்ஐ கூட்டிட்டுப்போனான்.

அங்க போனாலும் அவன் கவனம் அவ மேலேயே தான் இருந்துச்சு… அப்பப்போ சிரிச்சுட்டே நின்னான்…

மித்ரன் மட்டும் இதை பாத்தும் பாக்காம நோட் பண்ணான்… “மச்சான் ஏதோ வசமா சிக்கியிருக்கான்” புன்னகைத்துக்கொண்டான்.

அப்போது தான் அந்த கல் வந்தது…

ஆதர்ஷ் அதையும் பார்க்காமல் நல்லா நெத்தில ரத்தம் வரவரை கல்லாட்டம் நிக்க…மற்ற நண்பர்கள் அந்தப் பெண்களை துரத்த… மித்ரனும் அவர்களோடு இணைந்துகொண்டான்.

சுயநினைவுக்கு அப்போ தான் வந்த ஆதர்ஷ், எல்லாம் சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவ போய்ட்டா….

கண்ட கனவு எல்லாம் க்ளோஸ்… ரொம்ப சோகமாயிடுச்சு சாருக்கு… அதுக்கப்புறம் அவள பாக்கவேயில்ல…

இப்போ அடுத்ததடவ மறந்துடலாம்னு முடிவுபண்ணி பொண்ணுப்பாக்க போனா… அங்கேயும் வந்து நிக்குறா….

அவள் அன்று அவன்மேல் வீசின அந்தகல்ல தன் டேபிள் மேல ஒரு அழகிய மெட்டல் ஸ்டாண்டில் வைத்து தினமும் அதனுடன் பேசிக்கொண்டிருப்பான்…

அதுவும் அவனோடு சேர்ந்து இன்று மிகவும் சந்தோஷப்பட்டது….

பல மாதங்களுக்குப் பிறகு, அவன் அதிகநேரம் அன்று தூங்கினான்…..


அன்று அனன்யா எழுந்து குளித்து கிளம்பி தன் அறையிலிருந்து ஏழு மணிக்கு வெளியில் வந்தபோது வீட்டில் ஏதோ பேச்சுக்குரல்கள் கேட்டன.

“என்னடா இது… இவ்ளோ காலையிலேயே விசிட்டர்ஸா… யாராயிருக்கும்…” யோசித்துக்கொண்டே படியிரங்கினாள்.

அங்கே ஆதர்ஷ்…. கையில் காபி கப்புடன்… எதிரில் அவள் அப்பா…. இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்….

தடதடவென்று ஓடி கிச்சனுக்குள் நுழைந்து “மா… என்னம்மா இது… இவர் எப்படி இங்க !!!!” என்றாள்.

“வந்தவங்கள வாங்கன்னு கூப்பிட்டியா !!!” என்றார் அம்மா.

“அச்சச்சோ… அத மறந்துட்டேனே” என்றுவிட்டு மறுபடி ஹாலுக்குப் போய் அவனை வாங்க என்று அழைத்துவிட்டு வந்தாள்.

“ சாதாரணமா இரு… அவங்க அப்பா அம்மா எப்போ நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்… அதுக்கு புடவை எல்லாம் எப்போ எடுக்கலாம்னு கேட்டுவிட்ருக்கங்க…!!!” என்று சொல்லி தொடர்ந்தார்…..

“இன்னும் பதினஞ்சு நாள் கழிச்சு வர ஞாயிறு எல்லாருக்கும் சரின்னு படுதாம்… இந்த புதன் நல்ல நாள்… அன்னைக்கு புடவை எடுக்க போலாம்…” என்றார்.

“எதுக்கு அவ்ளோ அவசரம்… என் தீசிஸ் முடியட்டுமே…” அம்மா காதோடு சொன்னாள்.

“வீட்ல அவங்கள வச்சுக்கிட்டு பேசாத… அப்புறம் பேசிக்கலாம்… உன் படிப்புக்கு எந்த கெடுதலும் வராதுன்னு சொல்லிருக்காங்க….” என்றார் அம்மா அவளுக்கு ஆதரவாய் புன்னகைத்து…

“ப்ளீஸ் மா…எனக்கு டாக்டர் அனன்யான்னு தான் பத்திரிக்கைல வரணும்…” கொஞ்சம் மெதுவாகச் சொன்னாள்.

“பாத்துக்கலாம்… போ… போய் பேசிட்டு இரு கொஞ்ச நேரம்…” என்று சமையலில் இறங்கினார்.

வெளியில் அனன்யா அப்பா ஏதோ தொலைபேசி அழைப்பு வந்ததனால் உள்ளே சென்றிருக்க, இவையனைத்தையும் அவன் கேட்டுக்கொண்டிருந்தான்.

தொடரும்….

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments