விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 6

Pratheba Pratheba Follow Jul 26, 2020 · 2 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 6
Share this

அவள் அப்படி சிரித்ததைப் பார்த்ததும் அவனும் சிரித்துவிட்டான்…

“சிரிக்காதப்பா… ரொம்ப நல்லா இருக்க…” நினைத்துக்கொண்டே அவள் புன்னகைத்தாள்.

சார் எப்படி இருந்தார்ன்னு சொல்லவேயில்லையே உங்களுக்கு….

ஜீன் மற்றும் டீ ஷர்ட்…

க்ளீன் ஷேவ்…

கோவிலில் சாமிகும்பிட்டதற்கு அடையாளமாய் கொஞ்சம் விபூதி…

அப்புறம் முகம் முழுக்க சிரிப்பு…

கூடவே ஒரு இனம்காணமுடியா உணர்ச்சி…

ஹேண்சம் என்பதற்கு இலக்கணமாய்ன்னு ஒரு வரியில் சொல்லலாம்….

ஆதர்ஷ் - ம்ம்ம்… பேச்சு பாதிலேயே விட்டுட்டேனே… என்ன உனக்கு ஞாபகம் இருக்கா அனு…

அனன்யா – (அனுவா… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…) யா… இருக்கு… நீங்க கல்ச்சுரல்ஸ்க்கு வந்தீங்கள்ல… சாரி ஃபார் தட்… எனக்கு கொஞ்சம் கோபம் ஜாஸ்தி ஆய்டிச்சு அப்போ… ஃபங்ஷன்…

டென்சன்… அதனால தான்… சாரி அகைன்….

ஆதர்ஷ் – என்ன அதோட விட்டுடீங்க… கல்லால அடிச்சது மறந்துபோச்சா… (சிரித்தான்)

அனன்யா கொஞ்சம் அசடு வழிந்தாள்…. அனன்யா - அது… அது வந்து… அதும் பை மிஸ்டேக் தான்… இன்னொரு சாரி…

ஆதர்ஷ் – நீங்க வேணா சாரிங்கிரத வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி தாங்க… நான் ரிங்டோனா வச்சிக்குறேன்… (கண் சிமிட்டி சிரித்தான்)

அனன்யா – ஈஈஈஈஈ

ஆதர்ஷ் – அப்புறம் உங்களுக்கு நான் தான் பாக்க வரபோறேன்னு தெரியுமா!!!

அனன்யா – தெரியும்… அம்மா பேஸ்புக்ல பாக்க சொன்னாங்க… பாத்துட்டுதான் வந்தேன்… ஆனா நீங்க என்ன மறந்திருப்பீங்கன்னு நெனச்சேன்… சந்தர்பவசத்துல தான நாம சந்திச்சோம்… அதான்.

ஆதர்ஷ் – (மௌனம்)

அனன்யா – சரி நேரா விஷயத்துக்கே வரேன்… நீங்க யாரையோ விரும்புறீங்க தானே… மேரேஜ் வேணாம்னு நீங்க சொல்றீங்களா ?? நான் சொல்லட்டா ???

ஆதர்ஷ் – ஹேய்… நானே இதைத்தான் பேசனும்னு நெனச்சேன்… எப்படி சரியா கண்டுபிடிச்ச…

அனன்யா – (அச்சச்சோ… அப்போ உண்மைதான் போல என்று நினைத்து வாட்டமாய்) அப்படியா !!!

ஆதர்ஷ் – யெஸ்….

சிறு மௌனம் அங்கே நிலவியது…

விழியில் நீர்த்திரையிட்டது அனன்யாவுக்கு….

ஆதர்ஷ் தொடர்ந்தான்…

“ஐ லவ்யூ அனன்யா…உன்ன தான் நான் லவ் பன்றேன்… எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா…!!!!!”

அனன்யா முகத்தில் ஈயாடல…. அப்டியே மரம்…கடல்.. அலை… எல்லாமே ஸ்டாப் ஆகிடுச்சு…

ஆதர்ஷ் – உன்னை தான் கேக்கறேன்….!!!

நாலு வருஷமா தேடினேன்…

திருச்சி முழுக்க…

அனன்யா – என்ன சொல்றீங்க…

ஆதர்ஷ் தொடர்ந்தான்…

“உனக்காக மூணு வருஷம் உங்க கல்லூரி விழாவுக்கு வந்தேன்…

எப்படியாச்சும் பாப்போமா… ஏதாவது வாய்ப்பு கிடைக்குமான்னு…. ஒண்ணுமே நடக்கல…

இனி தேடி பயன் இல்லைன்னு முடிவுக்கு வந்து கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொன்னேன்….

ஆனா… இங்க உன்ன எதிர்பாக்கல…”

“நானும் கதையில இப்படி ஒரு டவிஸ்ட் எதிர்பாக்கலை…” என்றாள் அனன்யா அவன் பேச்சை இடைநிறுத்தி.…

“இப்போகூட என் ஃபிரண்டு அதுக்குதான் பேசினான்… ஆனா அவனுக்கு நீதான் பொண்ணுன்னு தெரியாது..” என்றான் சிரித்துக்கொண்டு….

“பீச்சில் பாத்தப்போவே சொல்லியிருக்கலாமே…”

“பூம்புகார்ல… அங்க உன்ன பாத்தப்போ என்னையே மறந்து நீ அலையில் ஆடினதை பாத்துட்ருந்தேன்… என்னால் நம்ப முடியலை நீதான்னு….

கல் விழுந்ததும் ஒரு நிமிஷம் என்ன நடந்துச்சுன்னே தெரில… என் கவனமும் மாறிடுச்சு…

அவங்ககிட்ட அப்போதான் நான் உன்னைப்பத்தி சொன்னேன்…

சமாதானம் செஞ்சதுலயே நேரம் போயிடுச்சு…

அப்போ உன்ன தவரவிட்டது தான் என் வாழ்க்கையில செஞ்ச பெரிய தப்புன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்….” என்று நிறுத்தினான்.

இப்படி அவன் சொல்லச்சொல்ல அவள் முகம் இன்பம், வியப்பு, தவிப்பு, சோகம் என்று வெவ்வேறு மனநிலைகளை பிரதிபலித்தது…

அவள் முகத்தைப்பார்த்து “மன்னிச்சுக்க அனு… உன் மனசுல என்ன இருக்குன்னே தெரியாம நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்” என்றான்.

தன்னை இப்படி ஒருவன் விரும்புவான் என்று அவள் நினைத்ததே இல்லை… எப்போதுமே காமெடிபீஸ் ஆக மட்டுமே வகுப்பில் இருப்பாள்… வீடு, புத்தகம் தவிர வேறெதுவும் தெரியாது….

இந்த வார்த்தைகள் அவளை வேறொரு உலகிற்கே தூக்கிச்சென்றன…

“ஹேய் இடியட்… ஐ லவ் யூ ட்டூ….” என்று ஓடிப்போய் கட்டிக்கொள்ளவேண்டும் போலிருந்தது.

ஆனால் அவள் அப்படியேதும் செய்யவில்லை… சில்லென்ற தென்றல் கொஞ்சம் அவள் கூந்தலை கலைத்துவிட்டுப்போனது… என்ன நடக்கிறது என்பதை மறந்தவள்போல் அவனருகில் சென்று ஒரு நிமிடம் அமைதியாக நின்றாள்…

“எனக்கு சம்மதம்ன்னு சொல்லிடறேன்…” சிரித்துக்கொண்டே படியேறபோனவளை…

“ஒரு நிமிஷம் டீ….”

“வாட்… டீ… மீ…” என்றாள் வியப்பில் புருவம் உயர்த்தி வடிவேல் மாதிரி….

“அய்யோ மன்னிச்சுக்கோங்க மேடம்… உங்களுக்கு பிடிச்சா மட்டும்… ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா…”

“ம்ம்ம்… அங்க வாங்க… குடும்பத்தோட எடுத்துப்போம்…” அவனிடம் சிக்காமல் ஓடிவிட்டாள்.

போகும்போதே… “ஹோய்… பேஸ்புக்ல கூப்பிடறேன்… உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க…” என்று சொல்லி கண்ணடித்துவிட்டு மற்றவர்கள் இருந்த இடத்திற்கு விரைந்தாள்.

அவனும் பின்னால் ஓடி அவளைப்பிடித்துவிட தோன்றியது… வீட்டில் உள்ளவர்கள் கூட இருப்பதை உணர்ந்தவன், மெதுவாக நடந்து அவ்விடம் அடைந்தான்.

அங்கு எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. அவள் என்ன சொல்லியிருப்பாள் என்று ஊகித்து அவனும் அவர்கள் மகிழ்வில் கலந்துகொண்டான்.

அம்மன் முன்பு, வித்யா அனன்யாவுக்கு பூவைத்து பொட்டு வைத்துவிட்டார்…

ஆதர்ஷ் அங்கு நடப்பவை அனைத்தும் தன் கைபேசிக்குள் படம்பிடித்துக்கொண்டிருந்தான்….

“எல்லாரும் ஒரு ஈஈஈஈஈ சொல்லுங்க.. ஒரு செல்ஃபிஈஈஈஈஈ…..”கிளிக்செய்துவிட்டு அவளைப்பார்த்து வெற்றிப்புன்னகை செய்தான்….

தொடரும்….

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments