விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 5

Pratheba Pratheba Follow Jul 25, 2020 · 2 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 5
Share this

மீனாட்சியம்மன் கோவில்… பொற்றாமரைக்குளம் அருகிலுள்ள மண்டபம்…

நம்ம கதாநாயகி எப்படி இருந்தாங்க தெரியுமா !!!!

பட்டுப்புடவையெல்லாம் அவளுக்கு விருப்பமில்லை….

சாதாரண கேரளா காட்டன்…

சிம்பிளாக ஒரு லாங்செயின்…

ஒப்பனையில் ஆர்வமதிகம் இல்லையென்பதால் சின்ன திலகபொட்டு அதன் மேல் ஒரு சிறு சந்தன கீற்று…

அப்புறம் சின்ன ஜிமிக்கி…

அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சம் மல்லிப்பூ…

அதோடு முகத்தில் ஆர்வம், வெட்கம், பதட்டம் என எல்லாம் சேர்ந்த கலவையாக பட்டாம்பூச்சி போல் கண்கள் படபடக்க நடந்து வந்தாள்.

அப்பா, அம்மா, அவள் மூவரும் நடந்து மண்டபத்திற்குள் நுழையும்போது ஒரு தம்பதியர் வந்து கைகுலுக்கி பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டனர்.

நீங்க நெனைக்கிறது சரிதான்… அவங்க தான் ஆதர்ஷ் அப்பாவும் அம்மாவும்….

“வணக்கம் சார்… நான் பொன்மாறன். இது என் மனைவி வித்யா… நாங்க ரெண்டுபேரும் அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர்களா இருக்கோம்… நான் பிஸிக்ஸ்… இவங்க ஹிஸ்டரி

டிப்பார்ட்மெண்ட்…எங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்… பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்தாச்சு…. கணவர், குழந்தையோட டெல்லியில இருக்காங்க….” பேசி முடித்தார் அவர்.

அனன்யா அப்பா பாண்டியன், தன்னையும் குடும்பத்தையும் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்போது கைபேசியில் ஏதோ பார்த்துக்கொண்டே அவன் வந்து தன் பெற்றோருடன் சேர்ந்துகொண்டான்.

சற்றும் தயக்கமில்லாமல் “வணக்கம் அங்கிள்… வணக்கம் ஆண்ட்டி… நான் ஆதர்ஷ்… தியாகராஜா காலேஜில் அசிஸ்டண்ட் ப்ரொபஸரா இருக்கேன்… “ என்று சொல்லிவிட்டு அனன்யா பக்கம் திரும்பியவன் வியப்புக்கான அறிகுறியாய் புருவங்கள் தூக்கி சற்று நின்றான்.

பின் பெரியவர்கள் இருப்பதை உணர்ந்து தலைமுடியை கலைத்துவிட்டு சிரித்து எப்படியோ சுதாரித்துக்கொண்டான்.

யாரும் பார்க்காமல் இவளும் அவனைப்பார்த்தாள். அவன் அதைப்பார்த்து புன்னகைத்தான். சிரிப்பு அழகா இருக்குல்ல என்று நினைத்துக்கொண்டாள்….

இவளும் அவனைப்பார்த்து புன்னகைக்க முயன்று ஏதோ பேருக்கு சிரித்துவைத்தாள்.

அவன் அவளையே வியப்பாக பார்த்துக்கொண்டு எங்கும் திரும்பவில்லை… இது தெரிந்து அனன்யா அவனை நேராக பார்க்காமல் வேறு பக்கமே பார்வையை வைத்திருந்தாள்.

சிறிதுநேர பேச்சுக்குப்பின்… பையனோட அம்மா சொன்னார், “கல்யாணம் பண்ணிக்க போறது அவங்கதான்… தனியாக பேசறதுன்னா பேசலாமே ”என்றார்.

“ம்ம்ம்ம் பேசலாமே ”என்று உடனே எழுந்தான் ஆதர்ஷ்…

“டேய் இருடா… என்னம்மா அனன்யா பேசலாம்ல… பயப்படாம பேசு சரியா…!!!”என்றார் வித்யா.

“சரிங்க ஆண்ட்டி… ” என்று சொல்லிவிட்டு பெற்றோரைப்பார்த்தாள்…. போ என்பதுபோல் சைகைசெய்ய அவளும் எழுந்தாள்.

ஆதர்ஷ் வேகமாக நடக்க இவளால் சேலையுடன் ஓட முடியவில்லை….

இங்க என்ன ரன்னிங் ரேசா வைக்குறாங்க… இப்படி ஓட்றான் அவன் மண்டையில் ஒரு கொட்டு வைக்கணும்ன்னு மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

குளத்தின் படிக்கருகில் சென்று அவன் திரும்பியபோது அவள் அப்போதுதான் பாதி தூரம் வந்திருந்தாள்.

“மெதுவாவே வாங்க… ஒன்னும் அவசரமில்ல” கொஞ்சம் கிண்டலாக சிரித்துக்கொண்டே சொன்னான்.

“அவனப்பாக்க ஏண்டி இவ்ளோ தயங்குற… ஓஓ வெக்கமாக்கும்… ” மனசாட்சி கேள்விகேட்டு சிரித்ததால், ஒருமுறை மட்டும் நிமிர்ந்துபார்த்து சரியென்பதுபோல் தலையசைத்துவிட்டு அங்கு சென்றாள்.

அது வெட்கமா என்பது தெரியவில்லை அவளுக்கு… ஆனால் முகத்தை பார்க்காமல் போய் படிக்கட்டில் அருகில் அவளும் நின்றாள்….

இரண்டு அம்மாக்களும் சொந்த பந்தம், ஊர் நடப்பு என்று பேச… அப்பாக்கள் இருவரும் அரசியல் பேசத்தொடங்கினர்….

அது இங்கிருந்த நம்ம ஜோடிக்கு கேக்குது… “ நாமளும் ஏதும் பேசலாமா !!! நான் உன்ன… சாரி உங்கள இங்க எதிர்பாக்கவே இல்ல… என்ன ஞாபகம் இருக்கா !!! ” என்று மௌனத்தைக் கலைத்தான்.

அனன்யா : மம்ம்ம்ம்…. ( மைண்ட் வாய்ஸ் - நம்மள ஞாபகம் வச்சிருக்கான்… ஆனா இப்போ போட்டோ பாக்கலையோ !!!!)

ஆதர்ஷ். : முன்ன பாத்தப்போ எல்லாம் அவ்ளோ பேசுனீங்க… இப்போ என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க…!!! வெறும் ம்ம்ம்ம் மட்டும் தானா…

அனன்யா : எனக்கு என்ன பேசுறதுன்னு தெரில…(உண்மைதான்… வெக்கம் ஒருபக்கம்.. ) ஆதர்ஷ். : சரி நானே ஸ்டார்ட் பன்றேன்….

இப்படி அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே கைபேசி சிணுங்கியது…. “உன் விழியீர்ப்பு விசையினிலே அன்பே… அன்பே…. நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே… அன்பே…”

ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தூரம் நகர்ந்து போய் பேசலானான்.

“ரிங்டோன் லாம் பயங்கரமா இருக்கு… பயபுள்ள கமிட்டெட் போல… ம்ம்ம்ம்…. நமக்கு செட்டாகாது… அவனுக்கு குடுத்து வைக்கல டீ… ” வெளியில் பேசாவிட்டாலும் உள்மனம் கமெண்ட்ரி கொடுத்துக்கொண்டே இருக்கும் அவளுக்கு எப்போதும்….

ஆனால் அப்படி ஏதும் நடக்கக்கூடாது… இது திருமணம் வரை போகவேண்டுமென்று உள்ளே அடித்துக்கொண்டது.

அங்கு ஆதர்ஷ் அவன் நண்பன் மித்ரனிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்…

“மச்சா… என்னடா உன் லவ் மேட்டர் பத்தி சொல்லிட்டியா…” எதிர்முனையில் இருந்தவன் கேட்டான்.

“இல்லடா… எப்படி ஆரமிக்கிறதுன்னு தெரில…” என்றான் ஆதர்ஷ்.

“இப்படி தயங்கிட்டே இருக்காத… லைஃப்ஐ மிஸ் பண்ணிடுவ… அப்புறம் நேரா மேரேஜ் தான்…” இது மித்ரன்.

“சரி டா… நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்” சொல்லிவிட்டு ஆதர்ஷ் அழைப்பை துண்டித்தான்.

“ஹேய் சாரி அனன்யா… என் ஃபிரண்டு தான் கால் பண்ணான்”

“ம்ம்ம்…ம்ம்ம்… நம்பிட்டேன் போ…”இதுவும் மைண்ட் வாய்ஸ் தான்… ஆனால் ஓஓ… சரிங்க என்று லைலா மாதிரி கண்களை இடுக்கிக்கொண்டு சிரித்தாள் அவன் அடுத்து சொல்லப்போவதைப்பற்றி அறியாமல்…….

தொடரும்…..

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments