விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 4

Pratheba Pratheba Follow Jul 25, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 4
Share this

அலைவந்து நனைத்த மாத்திரத்தில் நான்கு பேர் அவர்களை நோக்கி ஓடி வந்தனர்…..

பயந்துட்டீங்களா…!!!

என்ன நடந்துச்சுன்னு ஒரு சின்ன ரீவைண்ட்….

சூரிய ஒளியில் அந்த நீலக்கல் மிகவும் அற்புதமாய் தெரிந்தது…

அவளிடமிருந்து அதை வாங்கிவிடும் எண்ணத்தில் ரேஷ்மா நெருங்க…

அனன்யா கல்லை தராமல் தொலைவில் வீசினாள்….

அது பத்தடி தள்ளி நின்று கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்களில் ஒருவன் மேல் விழுந்தது….

இவர்கள் இருவரும் கல்வீசிவிட்டு அலையில் நனைவதைப் பார்த்த அடிப்பட்டவன் நண்பர்கள் கோபத்துடன் சத்தம்போட்டபடி அனன்யா மற்றும் ரேஷ்மாவை நோக்கி ஓடிவந்தனர்.

“என்னடா இப்படி சின்ன பிள்ளைங்க மாதிரி பண்ணறீங்க !! இன்டென்ஷனோட செஞ்சதில்லை !! இதுக்கு போய் ஏன் கோபப்படனும் ” கல்லடி வாங்கியவன் அவர்கள் பின்னே ஓடிவந்து தன் நண்பர்களைப் பிடித்து நிறுத்தினான்….

ஓடிக்கொண்டிருந்த அனன்யா நின்று மூச்சிரைக்க திரும்பிப்பார்த்தாள். ரேஷ்மாவும் திரும்பினாள்…. அப்போது தான் அவர்களுக்கு உயிர் வந்தது…. அப்பாடி என்று நிதானித்து பெண்கள் இருவரும் அவன் முகத்தை உற்று நோக்கினர்….

நெற்றியில் கொஞ்சமாக ரத்தம்… அவள் வீசியெறிந்த கல்லின் கைங்கரியம் என்று புரிந்தது. இன்னும் சற்று கூர்ந்து பார்த்துவிட்டு ஆச்சர்யத்தில் ஒன்றாக கூவினர்….” ஹேய் ராக்கெட்….!!!!”

கூட இருந்த அவன் நண்பர்கள் இதில் இன்னும் கடுப்பாக… அவன் அவர்கள் கோபத்தை தணிக்கும் பொருட்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தான்… சரி இந்த சூழ்நிலையில் பெண்களுடன் வம்பு வேண்டாமென்று விலக்கிவிட்டு, அனன்யா மற்றும் ரேஷ்மாவை பார்த்து போகும்படி சைகை செய்தான்.

இருவரும் வேகமாக நடையைக் கட்டி பேருந்து நிலையம் அடைந்தனர்…. “ச்ச ச்ச…. அந்த கல்லு கடற்கரை கிட்டேயே இருக்கு மச்சி….!!!! வாடி போயி தேடிட்டு வருவோம்” என்று அனன்யா சொல்லிவிட்டு ரேஷ்மாவை பார்ப்பதற்கு முன்… அவள் கைப்பையோடு பேருந்து அருகில் போக நடந்துகொண்டிருந்தாள்…..

விர்ரென்று போய் தடுத்த அனன்யா… “சொல்லிகிட்டே இருக்கேன் நீபாட்டுக்கு போற” என்றாள் சீரலாய்….

“உன்கூட வந்தா இனி நீ என்ன உருப்படியா ஊரு போய் சேர விட மாட்ட போல…!! அவசரப்படாதன்னு எத்தன தடவ சொன்னாலும் புத்தில ஏறவே மாட்டேங்குது….!!! அந்த கல்ல வீசனும்னு என்ன அவசியம்…!! வீசிட்டு நாம் ஏன் இப்படி ஓடி ஒளியனும் !!! எல்லாமே உன் அவசரம்” மிகக்கோவமாக சொன்னாள் ரேஷ்மா.

“சாரி டீ….!!! நான் தெரிஞ்சு செய்யல… !!”

“உன் சாரியை தூக்கி குப்பையில் போடு…!!! வந்து தொலை ப்ராந்து…!!!”

இருவரும் அவரவர் விடுதிக்கு வந்து சேர்ந்தாச்சு… அதுக்கப்புறம் ராக்கெட் பையன் பற்றிய நினைப்பே இல்லை…


இன்று….

” பாவம் டீ அந்த ராக்கெட் !!!” அனன்யா சொல்ல…. “அது நடந்து ரெண்டு வருஷமாச்சு… இதுவரைக்கும் என்ன பிரமாதம்…. ஒருவேள உனக்கு கட்டிவச்சுட்டா அப்றம் தான் இருக்கு அந்த ஆத்மாவுக்கு…. “ சொல்லிவிட்டு கடகடவென சிரித்தாள்.

“இரிடேட்டிங் ஆஹ் இருக்கு வைடீ ஃபோன” கட் பண்ணிவிட்டு அம்மாவிடம் போனாள்.

ரேஷ்மாவுக்கு தெரியும் இவள் இப்படித்தான் என்று… ஆதலால் திரும்ப அழைக்காமல் விட்டுவிட்டாள் .

“அம்மா…. அம்மா… சோறு போடுங்கம்மா… “ என்று அரபிக் கடலோரம் பாட்டை ஹம் செய்துகொண்டே வந்து அமுதாவை இடித்தாள்…

தடிமாடு… கூப்பிட்டு எவ்ளோ நேரமாச்சு… இந்தா தோசைய சாப்பிடு” அம்மா கடுப்பான குரலில் பேசிவிட்டு போனார்….

அனன்யா - மீ… சாரி மீ… நான் ரேஷ் கிட்ட பேசிட்டு இருந்தேன்… !! என்ன மா பிளேட்டு மேல இன்னொரு பிளேட்டு…. ஓஹோ… தோசையா…??

அமுதா – ம்ம்ம்ம்… சொல்லுவடீ… சொல்லுவ…. ஊத்தி அரைமணி நேரம் ஆச்சு…. பொழுது விடிஞ்சு பொழுது போறது கூட தெரியாம அளக்குறீங்க… அப்படி என்ன தான் டீ பேசுவீங்க !!!!!

அனன்யா - அது யூத் சீக்ரட் மா… யூ டோன்ட் அண்டர்ஸ்டேண்ட்….

அமுதா அன்று வீட்டில் ஆடி அமாவாசை என்று வகை வகையாக சமையலுக்கு ஆயத்தம் செய்ததால், “உன்கிட்ட வாய குடுத்தா பேசிட்டே இருப்ப… எனக்கு வேலையிருக்கு போ…” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு இதேபோல் வாயாடிக்கொண்டே வேலைகளையும் பகிர்ந்துகொண்டாள்.

அவள் மகிழ்ச்சியாகவும் இருந்தாள், அதேசமயம் பயத்துடனும் இருந்தாள். திருமணம் ஆனால் சுதந்திரம் போயிடும்னு பயம்…

ஒரு விதமான ரோலர்க்கோஸ்டர் மனநிலை அது….

சமயத்தில் “ நான் பண்ண மொக்கை பிரச்னையெல்லாம் அவன் பெருசுபடுத்தல… முறைக்ககூட இல்ல… கல்யாணம் பண்ணாலும் இப்படி பாத்துகிட்டா நல்லா இருக்கும்…” என்று மனம் சொல்லும்போது மிதக்கும் உணர்வும் வரும்….

“ பாக்க நல்லா தான்யா இருக்கான்… ம்ம்ம்… எந்த ஹீரோ மாதிரியும் இல்ல… ஆனா …. பாத்ததும் புடிக்கும் எல்லாருக்கும்… “

வேறொரு நேரம் “ நம்மள அதிகப்பிரசங்கின்னு நெனச்சுருப்பானோ…!!

இதுகிட்ட பேச தேவயில்லைன்னு கூட விலகியிருக்கலாம்…!!!” என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

“இல்லன்னா வேற யாரையும் விரும்புறானோ என்னவோ..!!! “ இந்த எண்ணமே அவளுக்கு சோர்வு தந்தது.

இப்படி யோசித்துக்கொண்டே அவள் தூங்கிப்போனாள்.

மறுநாள் காலையில் காபியோடு அம்மா இன்னொன்றும் தந்தார். அது ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பையனைப் பாக்கப்போறோம் எனும் செய்தி……

அனன்யா அப்பாவும், பையனோட அப்பாவும் பேசினார்களாம். பாத்துட்டு பிடிச்சுருந்தா மத்தது பேசிக்கலாம் என்று எண்ணமாம்.

காலை டிபனுக்கு செய்தவற்றை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு அம்மா அப்பா அவள் மூவரும் சாப்பிட்டபோது……

“பாரு டா…ஏன் உம்முன்னு இருக்க… போய் பாப்போம்…. உனக்கு பிடிச்சா தான் எதுவும் நடக்கும்… இதுக்காக மனசை குழப்பிக்காத… சரியா !!!” அப்பா சொன்னார்.

“ம்ம்ம்ம்….” கொஞ்சமாக புன்னகை எட்டிப்பார்த்தது.

இதுதான் அவள் அப்பா…

அம்மாவுக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் சாப்பிட்டு எழுந்துவிட்டார். உள்ளுக்குள் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டுதல் மட்டும் இருந்தது….

நாட்கள் வேகமாய் நகர்ந்தன… அன்று காலை எழுந்தபோது ஞாயிற்றுக்கிழமை என்று சொன்னது கைபேசி திரை…….

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments