விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 3

Pratheba Pratheba Follow Jul 23, 2020 · 2 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 3
Share this

“எடீ… நோக்கடீ… எண்டே அம்மையும் அச்சனும் எந்து சேஸ்குன்னாரூ…”

“தெலுங்கு படமும் மலையாள படமும் மாத்தி மாத்தி பாக்காதன்னு சொன்னேனே கேட்டியா !!! எனக்கு தமிழ் நல்லா தெரியும்… பறா…”

“ உன் நாக்கு ஏதும் கருநாக்கா டீ… நாலு வருஷம் ஆனாலும் நீ சொன்னது அப்டியே நடக்குது”

“ஏன் டீ… ஏதும் குழப்பமா ???“

“நேத்து கோவிலுக்கு போனேன்னு சொன்னேன்ல அங்க ஒரு ஆண்ட்டி கிட்ட எங்கம்மா என் வாழ்க்கையே அடகு வச்சுட்டாங்க டீ…!!!! அந்த ராக்கெட் பையன் இருக்கானே… அவன் பேஸ்புக் காமிச்சு… இதான் மாப்பிள்ளை அப்டின்னு சொல்றாங்க…”

“அடிப்பொளி….ராக்கெட் பையன்னு அத்தோட முடிச்சிட்ட… மிச்ச கதை எல்லாம் ஞாபகம் இல்லையா…!!! தீசிஸ்க்கு டேட்டா எடுக்க போனப்போ நடந்தது மறந்துபோச்சா ???”

மறுபடியும் பிளாஷ்பேக் …… இப்போ கீழடி அகழ்வாய்வுகளுக்குப் பிறகு மக்கள் நிறைய தொன்மையை பத்தின விஷயங்களை தெரிஞ்சுக்க தொடங்கி இருக்காங்க…

ஆனால் அனன்யாவுக்கு அதில் சின்ன வயதில் இருந்தே பெரும் ஆர்வம்… ஹிஸ்டரின்னா உயிர வித்துட்டு படிப்பா… புத்தகங்கள் எப்போதும் அவளுக்கு நண்பர்கள்…

அதனால அவ தன்னோட டாக்டரேட் தொல்லியல் துறையில தான் வங்கணும்னு பிடிவாதமா தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில சேர்ந்துட்டா…

வாய் லொட லோடன்னு பேசும்… எங்க அவ இருந்தாலும் எல்லாருக்கும் தெரிஞ்சுடும்…. ஆனால் படிப்பும் நல்லா வரும்…

தன்னுடைய ஆய்வுக்கட்டுரைக்காக கூடவே படிச்சுட்டு இப்போ சாஸ்த்ரா ல பி.எச்.டி பண்ற ரேஷ்மாவை எப்போதும் கூட்டிட்டே சுத்துவா….

ரேஷ்மாவுக்கும் அவளோட ஆர்வம் மற்றும் அருகாமை ரொம்ப பிடிக்கும்… எல்லாரும் “கல்யாணம் ஆனவாச்சும் பிரிவீங்களா இல்லை நீங்க வேணாம் போங்கடான்னு வீட்டுகாரங்க கிட்ட சொல்லுவீங்களா “ அப்படின்னு கேப்பாங்க……


அது ஒரு அழகான கடற்கரை… பூம்புகார் என்னும் பழந்தமிழர் வாழ்ந்த நகரம்….

பன்னிரண்டாயிரம் வருடமாக மக்கள் புழங்கி இருப்பதாய் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்….

ஆனால் இப்போது அந்த சிறப்புகள் ஏதுமில்லாமல் ஒரு சிற்றூராய்… நிற்கதியாய் நிற்கிறது….

ரொம்ப சீரியஸா போறோமோ…????

அனன்யா அவ்ளோ சிறப்பான இடம் சிதைஞ்சு இருக்கத பாத்து இப்படிதான் ரொம்ப வருத்தப்பட்டா…..

அங்குள்ள மியூசியம், ஒரு பழங்கால கோவில், கண்ணகி மணிமண்டபம் மற்றும் சில இடங்களையும் பார்த்துவிட்டு கடற்கரையில் அரைமணிநேரமாக ஆடிக்கொண்டிருத்தபோது அவள் காலில் ஏதோ தட்டுப்பட்டது.

முதலில் சிப்பி அல்லது கிளிஞ்சலாக இருக்கும் என்று நினைத்து பொருட்படுத்தவில்லை இவர்கள். ஒரு இரண்டு நிமிடம் காற்றும் அலைகளும் ஓய்ந்து விட சட்டென்று அந்தக்கல் அனன்யாவின் கண்ணில் பட்டது.

அதைக் கையில் எடுத்ததும் ஏதோவொரு உணர்வு… மகிழ்ச்சி என்று ஒரு சொல்லில் நிறுத்திவிட முடியாது…

“இது மாதிரி ஒரு பொருளை வாழ்நாளில் பாத்தது இல்லடீ… பாக்க எவ்ளோ அழகா இருக்குல்ல….!!!” என ரேஷ்மா சொன்னது தான் தாமதம்…. அனன்யா குடுகுடுவென ஓடிப்போய் நான் தரமாட்டேன் என்பது போல பாவனை காட்டினாள்.

“ஹேய்… ஹேய்… அனன்யா ஓடாத இப்படி… நான் ஒன்னும் உன் ப்ரீசியஸ் ஸ்டோன வாங்கிக்க மாட்டேன்..!!!

நில்லுடீ!!!” சொல்லிக்கொண்டே பின்னால் ஓடினாள் ரேஷ்மா….

“முடியாது டீ… செம்ம க்யூட்டா இருக்கு பாரேன்… “ சொல்லிக்கொண்டு தோழியைப் பார்த்துக்கொண்டு பின்னால் நகர்ந்தாள்… சூரிய ஒளியில் அந்த நீலக்கல் மிகவும் அற்புதமாய் தெரிந்தது…

அவளிடமிருந்து அதை வாங்கிவிடும் எண்ணத்தில் ரேஷ்மா நெருங்க… அனன்யா கல்லை தராமல் தொலைவில் வீசினாள்….

அப்போது ஒரு பெரிய அலையொன்று கரை நோக்கி நகர்ந்து வர தொடங்கியதைப் பார்த்து இருவரும் மேடான இடத்தை அடைவதற்குமுன் அலை வந்து நனைத்துவிட்டது….

கல் எங்கே போனதென்று தெரியவில்ல… ஆனால் அப்போது ஆண்கள் நான்கு பேர் இவர்களை நெருங்கி வருவது கண்டு அனன்யாவும் ரேஷ்மாவும் பயந்து ஓடத்தொடங்கினார்கள்….

தொடரும்….

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments