விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 2

Pratheba Pratheba Follow Jul 22, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 2
Share this

அனன்யா வீடு….

யாருன்னு தெரிலையா… நம்ம கதாநாயகி தான்… இவ்வளவு நேரமா நீங்களும் பேரு கேக்கல… நானும் சொல்லல…😉

சரி கதைக்கு போவோம்….

அவன் முகநூல் பக்கத்தை அவள் தேடி ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டாள்.

அந்த புகைப்படத்தை பார்த்ததும் அவளுக்கு அப்படியே ஒரு நிமிடம் மண்டைக்குள் கொசுவர்த்திச் சுருள் சுற்ற ஆரம்பித்தது….

“ நல்லா மாட்டிக்கிட்ட டி… உனக்கு முடிவு வரப்போகுது….” தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்……


மதுரையின் வேறொரு பகுதி… அண்ணா நகர்…

வித்யா காலேஜுக்கு ரெடியாகி கொண்டிருந்தார்.

“என்னம்மா அப்பா சீக்கிரமே போயாச்சா !!! நான் வேணா உங்களை கொண்டுவந்து விடவா ?!!!”

“ ஆதர்ஷ் ஒரு நிமிஷம் இங்கே வாடா…. உன்கிட்ட ஒன்னு பேசணும்.”

“ சொல்லுங்க மா என்ன விஷயம்…”

“ அது ஒன்னும் இல்லடா… உன் ஃப்ரண்ட் மித்ரன் இருக்கானே, அவனுக்கு போன மாசம் பொண்ணு பாத்தாங்களே என்ன ஆச்சு…?”

“ அவன் அதுக்குள்ள கல்யாணமா அப்படின்னு யோசிக்கிறான். இன்னும் கொஞ்சநாள் லைப் என்ஜாய் பண்ணலாம் அப்படின்னு நினைக்கிறான்.”

இவன் மனசுல என்ன கணக்கு வச்சிருக்கான் தெரியலையே என்று நினைத்துக்கொண்டு… “ லவ் கிவ் ஏதும் பண்றானா டா…”

“ அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…”

“ நீ யாரையும் விரும்புறியா தம்பி !! அப்படி ஏதும் இருந்தால் சொல்லிடு”

“ ஏம்மா உங்களுக்கு மருமகள கொண்டு வரணும்னு ஆசை வந்திருச்சா..!!” என்றுவிட்டு புன்னகைத்தான்.

“எல்லாருக்கும் அது இருக்கதானே செய்யும்… எனக்கு இருக்காதா..! உனக்கு ஏதும் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருந்தா சொல்லிடு தம்பி”

“பாருங்கம்மா… நீங்க பார்த்து முடிவு பண்ணிக்கோங்க… எனக்கு ஒன்னும் பெருசா ஆசை எல்லாம் இல்லை”

“என்னப்பா இப்படி சொல்ற… கல்யாணம் பண்ணி வாழ போறது நீதானே”

“அம்மா எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லம்மா… அப்படி வச்சிகிட்டு இருந்ததான் வாழ்க்கை கஷ்டமா இருக்கும்… டோன்ட் வரி… நான் ரெடி ஃபார் மேரேஜ்…” சிரித்துக்கொண்டே சொன்னான்.

“நம்ம சித்தி நேத்து குலதெய்வம் கோயிலுக்கு போனாங்க. அங்க அவங்க நம்ம சொந்தகாரங்க ஒருத்தர பார்த்திருக்காங்க.

அவங்க பொண்ணு பார்க்க நல்ல லட்சணமா இருக்காளாம்… திருச்சியில் பி.எச்.டி பண்ணிட்டு இருக்காளாம்…”

திருச்சி என்று சொன்னதும் அவன் கண்ணுல ஒரு சின்ன ஒளி வந்துட்டு போனத அவங்க கவனிச்சாங்க….

“ நீ பாத்துட்டு சரின்னு சொன்னேனா மேல பேசலாம்… என்னன்னு யோசிச்சு சொல்லு” என்று சொல்லிவிட்டு தன் கைப்பையோடு எழுந்தார்

“ என்ன பாதியிலேயே விட்டு போயிட்டீங்க… எங்க போய் பார்க்கிறதுனு சொல்லுங்க…” கண்ணடித்தான்.😉😉

“இப்போவேயா…. 😂வர்ற ஞாயிற்றுக்கிழமை நல்ல நாளா இருக்குன்னு… கோவில்ல பாக்கலாம்ன்னு இருக்கோம்..”


நான்கு வருடங்களுக்கு முன்பு……

அவள் மாஸ்டர்ஸ் படித்தது திருச்சியில் பெரிய தேசிய கல்லூரி… ஆண்டுக்கு ஒருமுறை அங்கே கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். நாடு முழுவதும் இருந்து பல மாணவர்கள் வருவது உண்டு..

எங்கே என்ன அநியாயம் நடந்தாலும் அங்கே முதலில் போய் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது அவளுக்கு சிறுவயதிலிருந்தே உள்ள கெட்ட பழக்கம்.

ஆனால் அவளுக்கே அன்று விதி ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தது.

அந்த விழாவின் இரண்டாம் நாள்….

அவள் தனியே நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு பேப்பர் ராக்கெட் வந்து அவள் தலையில் விழுந்தது.

அது வந்த திசையில் இருந்த கேன்டீன் வாசலில் கூட்டமாக நிறைய பையன்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ஒருவன் கைகளில் நிறைய A4 காகிதங்களை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.

இவள் பரபரவென பக்கத்துல போய் “ஹேய்….நீ பேப்பர் வச்சிருந்தா போறவரவங்க மேல எல்லாம் ராக்கெட் விடுவியா !!!” என்று சீறினாள்.

“ ம்மா… எதுக்கு என்கிட்ட இப்படி வந்து பேசுறீங்க… நான் ஒன்னும் உங்க மேல ராக்கெட் வீசலயே !!!!” பொறுமையாகக் கேட்டான் அவன்.

“தப்பு பண்ண யாரும் பண்ணேன்னு ஒத்துக்க மாட்டாங்க… நான் நேரா போய் உங்க காலேஜ் எதுன்னு கேட்டு புகார் செய்யப்போறேன், எந்த போட்டியிலயும் கலந்துக்க விடாம செய்றேன் பாரு….!!!” .

உடனே அருகில் இருந்து சில பையன்கள் ஓடி வந்து ”சாரி சார்… நாங்க தான்… அந்த பக்கம் உள்ள தோழியைக் கூப்பிட ராக்கெட் விட்டோம்” என்று சங்கடமாய் சொல்ல..

“ சரி விடுங்க … தெரியாம தானே… நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன் “ என்றான் இவளைக் கண்டுகொள்ளாமல்.

“என்னது சார் ஆஆ…..” அவள் மன்னிப்பு கேட்கும் விதமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து வேகமாய் நகர்ந்துவிட்டாள்.

அவன் மாணவர்களை கல்லூரி பொறுப்பில் அழைத்து வந்தாலும், அவளும் விழா அமைப்பு குழுவில் இருந்ததாலும் அடிக்கடி இருவரும் பார்க்க நேர்ந்தது.

ஒவ்வொரு முறையும் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைப்பதும், நமக்கு எதுக்கு வம்பு என்று விலகுவதுமாகவே இருந்தாள்.

ஆனால் அவன் இவளைப் பார்த்ததாகவே தெரியவில்லை.

அன்று இரவு விடுதியில்….

“எப்போதுமே அவசர புத்தி உனக்கு… கையில பேப்பர் வச்சிருந்தார் சரி…. அவர் தான் வீசுனார்ன்னு எப்படி முடிவு செஞ்ச…!!!” தோழி ரேஷ்மா கடிந்துகொண்டாள்.

“இல்லடி… உனக்கு தான் தெரியுமே நான் எவ்ளோ கோவக்காரின்னு… என்னால முடில மச்சி… அநியாயம் எதிர்ல நடந்தாலே பொறுத்துக்க மாட்டேன்… எனக்கே நடந்தா…!!! அதான் கண்ண மறச்சிடுச்சு..!!!” பாவமாய் சொன்னாள் அனன்யா…

“நீயெல்லாம் எங்கேயாச்சும் போயி வசமா சிக்குனா தெரியும் டீ…!!” இது ரேஷ்மா.

“ஏண்டி…. எவ்ளோ நேரமா கழுதை மாதிரி காட்டு கத்து கத்துறேன்… காது கேக்கலையா உனக்கு…. சாப்பிட வா சீக்கிரம்…” அம்மாவின் குரல் கேட்டு தன்னிலை உணர்ந்து நினைவுக்கு வந்தாள்.

“ஆஆம்ம்மா… வரேன்…” இவளும் இங்கிருந்தே கத்தினாள்..

பின்னணி இசையில் பழைய கால படங்களில் வரும் சோக இசை டோய்ங்ங்ங்ங் என்று மண்டைக்குள் ஒலித்தது….

சிக்கிட்டேன் டி… சிக்கிட்டேன்… என்று வாய்க்குள் சொல்லிக்கொண்டே ரேஷ்மாவுக்கு தொலைபேசியில் அழைத்தாள்.

தொடரும்….

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments