விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 18

Pratheba Pratheba Follow Aug 16, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 18
Share this

அனு மெல்ல அதனைத் திறந்தாள்….

நீங்க நினைச்சது சரிதான் மக்களே…… அது இந்திரநீலக்கலே தான்….

ஆனால் இவர்கள் பார்த்தபோது இருந்ததுபோல் இல்லாமல், அப்போதுதான் பட்டைதீட்டப்பட்டு அற்புதமாய் மிளிர்ந்தது…….

“ஹேய்… இது எப்படி உங்க கைக்கு வந்துச்சு… !!!!” என்று வியந்து அனு விழிவிரித்தாள்.

இதைக் கேட்டவுடன் மணிமேகலை முகத்தில் ஒரு சிறு சோகம் படர்ந்து மறைந்ததனை அனன்யா கண்டுகொண்டாள்.

“என்னாச்சு சட்டுன்னு முகம் வாடிப்போச்சு…!!!!”என்று மனதில் நினைத்ததை கேட்டுவிட்டாள்.

மணிமேகலை “இது அரசிளங்குமரன் பரிசளித்தது….. இவ்வுலக வாழ்வில் அவரோடு இணைய முடியாவிட்டாலும் அவர் தந்த பரிசு மட்டுமாவது என்னோடிருக்கட்டுமென்று வைத்துக் கொண்டேன்…!!!” என்றாள்.

“அப்போ மணிமேகலை நீங்கள் உண்மையிலேயே அந்த உதயகுமாரன விரும்புறீங்களா…???” என்று அனன்யா பட்டென்று கேட்டாள்.

மணிமேகலைக்கு இதற்கு விடை தெரியவில்லை…

“இருக்கலாம்…!!! ஆனால் என் அம்மாவின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, நான் இல்லற வாழ்வு வேண்டாமென முடிவெடுத்து விட்டேன். முதலில் சிறிது சஞ்சலம் இருந்தாலும், தற்போது என் மனம் முழுமையாக துறவறத்தில் நிலைத்து விட்டது….!!!!!!” என்றாள் மணிமேகலை.

“உங்க அம்மாவை தவிர வேற குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நீங்க துறவியாக போறதில விருப்பமில்லை என்று சொல்லி ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க…. அது உண்மையா…??

நிச்சயமா ஒரு குடும்பத்து பொண்ணு துறவியா மாறுவது யாருக்குமே பிடிக்காததா தான் இருக்கும்…!!! நீங்க அவங்களை பத்தி நினைக்கலயா…??” என்று அனன்யா கேட்க….

“எங்களுடையது தாய்வழி சமூகம்…! என் தாய் வழி பாட்டி தான் என் அம்மாவின் வாழ்வு நிலையில்லாமல் ஆனதற்கு காரணம்…..!!!! இப்போது என்னை இளவரசன் உதயகுமாரனை மணந்து கொள்ளச் சொல்வதும் அவரே…!!

என் தந்தையின் செல்வங்களை அபகரித்த அவர், மனம்வருந்தி அதனைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே என் தாய் துறவறம் பூண்டார். தந்தைவழி சொத்துகள் யாவும் அவர் தம் உறவினர்க்குச் சேரும்படி செய்தார்….!!!! இப்போது நான் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மனவருத்தம் நிலைக்காது……!!!” என்று நிறுத்தினாள் மணிமேகலை.

“அம்மாடி….!!!! நீ என்ன இப்படி பேசுற….!!!! அவங்க தப்பு செஞ்சவங்க அதுக்கு அவங்க தண்டன அனுபவிக்கணும்….!!! ஆனா இந்த சின்ன வயசுல நீ அவங்களுக்காக ஏன் தண்டன அனுபவிக்கணும்ன்னு நினைக்கிற…???? இது உன்னுடைய வாழ்க்கை அதை சூனியமாக்க கனவுல கூட நினைக்கக்கூடாது…!!! அந்த பையன உனக்கு புடிச்சிருந்தா நீ அவன கல்யாணம் பண்ணிக்கோ…!!!

இதோ பாருங்க…..!!!! உங்க காலத்துல பெரிய தடங்கல்கள் ஏதும் இல்ல….!!!! ஆனா வருங்காலம் அப்படி இருக்கப்போறதில்ல….!!! எங்களுக்கு ஜாதியும் மதமும் பணம் தகுதின்னு பல வேறுபாடுகள் இருக்கு….!!! உனக்கு இப்போது எதுவுமே இல்ல….!!!! அதனால மகிழ்ச்சியா கல்யாணம் பண்ணிக்கோ….!!!!!” என்று பாடம் சொல்லி முடித்தாள்.

மணிமேகலைக்கு இவள் சொல்லும் அனைத்தும் புதிதாகவும் புதிராகவும் இருந்தது…. “நீ சொல்வது ஒருபுறம் இருந்தாலும் அந்த அரசகுமாரன் தன் முற்பிறவி பயனாகவே இவ்விதம் அல்லல் படுகிறான்….!!!! கடந்த பல பிறவிகளாக நானும் அவனும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்…!!! முற்பிறவியில் அவன் செய்த பாவத்தின் காரணமாய் நாங்கள் இப்பிறவியில் சேர முடியாது என்பது விதியாகும்….!!!!” என்றாள் மணிமேகலை.

“ஏ லூசு பொண்ணே…!!!! விதி, போன ஜென்மம், புருஷன் பொண்டாட்டி, இது எல்லாமே எதுவுமே உண்மை கிடையாது….!!!! உன்ன எங்க காலத்துக்கு அழைச்சிட்டு போக முடிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்ன்னு தோணுது….!!!!! அங்க நீ வந்து பார்த்தா…, உனக்கு புரியும்….

இது எல்லாம் விதி கிடையாது….உங்க அம்மா செஞ்ச சதியா இருக்கும்….!!! உன்னை அந்த தீவுக்கு அழைச்சுட்டு போன குரு தானே உன் கிட்ட எல்லாம் சொன்னாங்க…!!!! அதுவும்கூட உன்ன மாத்தி துறவறத்திற்கு அழைச்சிட்டு போறதுக்காக இருக்கலாம்….!!!

நீ திருமணம் பண்ணி வாழ்க்கையை வெறுக்க வேண்டாம் அப்படின்னு உங்க அம்மா மனசுல இருக்கலாம்… ஆனா அந்த உதயகுமாரன் நல்லவனா இருந்தா நீ அவனை கல்யாணம் பண்ணிக்க…. அதுல என்ன தப்பு இருக்கு…!!!!! ஒருவேளை அவனோட வாழ பிடிக்கலன்னா…, நீ உனக்கு விருப்பப்பட்ட போது துறவறம் போறதுக்கும் உங்களோட காலத்துல வாய்ப்பு இருக்கு….….!!!!” என்றாள் அனு.

இவ்வளவு நேரம் ஆகியும் காணாததால், அனன்யாவைத் தேடி ஆதர்ஷ் அந்த புத்த விகாரம் முழுவதும் அலைந்தான்.

அப்போது மணிமேகலை அறையில் அவள் பேசிக்கொண்டு இருப்பது தெரிந்ததும், தயக்கத்துடன் வெளியில் வந்து நின்றான்.

இறுதியாக அனன்யா பேசிய வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. அந்நேரம் ஆதர்ஷ் குறுக்கிட்டு “அவங்களோட தனிப்பட்ட விஷயத்துல தலையிடாத அனு…!!!” என்று அனன்யாவிடம் சொல்லிவிட்டு… “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் மணிமேகலை…!!!! அனுமதியின்றி நான் உள்ளே வந்திருக்க கூடாது…!!” வா போலாம் என்று கோபமாக அனுவை அழைத்தான்.

மணிமேகலை “அவள் சொல்வதில் தவறு ஏதும் இல்லை….!!!அவளை பேச விடுங்கள்…!!!” என்று கூறினாள்.

அனன்யா உடனே “பாத்தீங்களா..!!!! நான் பேசுறது அவங்களுக்கு பிடிச்சிருக்கு ஆதி…!!!! ஷி நீட் திஸ் விஸ்டம்….!!!!!” என்று ஆதியிடம் சொல்ல…

ஆதியோ… “இதுவே உனக்கும் எனக்கும் வீட்ல பாத்து நிச்சயம் பண்ணாம… நான் நேரா உன்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்லியிருந்தா என்ன செஞ்சுருப்ப அனு…!!!! இவங்க நிலைமையும் அதானே…!!!” என தனக்கு சரியென்று பட்டதை பேசினான்.

“இது அவங்களோட தனிப்பட்ட முடிவுன்னா சரிதான்….!!!! ஆனா அவங்களா எடுத்த முடிவு இல்லை ஆதி இது….!!!! இந்த முடிவுக்கு அவங்க நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்காங்க….!!!!!

நான் சூழ்நிலைய அவங்களுக்கு புரிய வைக்கிறேன்….!!!! காதல பெரிய விஷயமா நான் சொல்லல…..!!! ஆனால் நம்மளை புரிஞ்சுக்கிற ஒருத்தர் கூட இருக்கிறது நம்ம வாழ்க்கைக்கு நல்லதுன்னு தான் அவ கிட்ட சொல்றேன்…..!!!!

நான் உன்னை கோவில்ல பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு காதல் கீதல் மேலே ஒரு நம்பிக்கையும் இல்லை….!!!!!

ஆனா இப்போ, நீ எனக்குள்ள அப்பப்போ உண்டாக்குற அந்த அழகான உணர்வுகள், உன்னோட இருக்கும்போது வரும் தைரியம்…. இதெல்லாம் ரொம்ப நல்லாருக்கு ஆதி….!!!!

அதுமாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள மணிமேகலையும் அனுபவிக்கணும்ன்னு எனக்கு தோணுது ….!!! அந்த ராஜாவோட பையன் இவங்கள உண்மையாகவே விரும்பினார்ன்னா இவங்க அவரை கல்யாணம் பண்ணிக்கட்டுமே ..…..!!!!” என்று எப்போதும் இல்லாத வகையில் அனன்யா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்.

தன்னைப்பற்றி அவள் சொன்னது ஆதியின் மனதில் பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது.

அப்போது ஒரு துறவி அங்கு வந்து வாசலில் ஒருவன் நினைவின்றி அமர்ந்திருப்பதைத் தெரிவிக்க, மணிமேகலை மற்றும் சுதமதி அங்கு விரைந்தனர்.

தொடரும்….

அனைத்து அத்தியாயங்களும் படிக்க

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments