விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 14

Pratheba Pratheba Follow Aug 07, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 14
Share this

காவிரி புகும் பட்டினம் – அதாவது காவிரி நதி கடலுடன் சங்கமிக்கும் இடமே காவிரிப்பூம்பட்டினம்.

நதிகள் எப்போதும் ஒரே வழியில் செல்வதில்லை… அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இயற்கையின் மாற்றத்துக்கு ஏற்ப போக்கும் திசையும் திரிந்து செல்லும். அதன் கரையில் இருக்கும் மக்களின் வாழிடங்களும் அதற்கேற்ப மாறும்.

நாடோடிகளாய் குகைகளில் வசித்து வந்த மக்கள் முதன்முதலில் நதிக்கரைகளிலேயே தங்கள் வாழ்வினை நிலைப்படுத்திக்கொண்டனர். அதனால் தான் பழைய நாகரிகங்கள் யாவுமே ஆற்றங்கரைகளிலேயே அமைந்திருந்தன.

அதுவே அவர்களுக்கு வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புக்குத் தேவையான நீரை வழங்கியது.

உணவுப்பசி மற்றும் உணர்வுப்பசியே அக்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கு உந்துதல். தன்னையும் குட்டிகளையும் காத்துக்கொள்ள மனிதன் கண்டறிந்த வழிமுறை… ஆற்றங்கரை குடியேற்றம்…

அப்படித்தான் பழந்தமிழகத்தின் மக்களும் வைகை காவிரி ஆறுகளின் கரைகளில் வசிக்கத் தொடங்கினர்.

இது இரண்டாயிரம் வருட கதையில்லை… இருபதாயிரம் வருட கதை…..

நமக்கு இப்போது வரைக்கும் கிடைச்ச தரவுகள் மற்றும் கார்பன் டேட்டிங் ஆய்வுகளின் படி பூம்புகார் நகரம் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தெரியவந்துள்ளது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை இந்நகரம் செழித்தோங்கி இருந்ததாக அறிகிறோம்….

பின் வந்த களப்பிரர் ஆட்சியில் பொலிவிழந்து, அதன் பின்னர் வந்த பல்லவர் ஆட்சியில் கொஞ்சம் வளர்ந்தது.

இறுதியாக பிற்கால சோழர்கள் சிறிது மேம்படுத்தினாலும் தன் பழைய சிறப்பினை அது மறுபடி அடையவேயில்லை.

சமீபத்தில் நடந்த கடல் ஆய்வுகளின் முடிவுகள் நம் கண்ணால் காண்பது மட்டும் உண்மையில்லை என்று உரக்கச் சொல்கின்றன.

கடலின் ஆழம் சொல்லும் செயற்கைக்கோள் புகைப்படங்களை ரிமோட் சென்சிங் எனப்படும் தோலையுணர்வு தொழில்நுட்பம் மற்றும் ஜியோ-கிராபிக்கல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (GIS) மூலம் சென்ற நூற்றாண்டில் வடிவமைத்தனர்.

இந்தியப் பெருங்கடல் முழுதும் 2000 மீட்டர் ஆழம் இருக்க, குமரிக்கடல் பகுதியின் ஆழம் அதிகபட்சமாய் 125 மீட்டர் மட்டுமே இருக்கிறது.

அதிலும் கடலுக்குள்ளும் மலைத்தொடர்கள் இருக்கின்றன. ஆறுகள் ஓடியதற்கான தடயங்கள்(depressions) தெரிகின்றன.

அவ்வாறெனில் அங்கே ஒரு நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும் அல்லவா..??? நிலமாக இருந்த இடம் கடலாய் மாறியது எப்போது ???

எப்படி ஒரு நிலப்பரப்பே கடலானது…????

இந்த மாற்றம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஐஸ் - ஏஜ் பனி உருகியதன் விளைவு.

புவி வெப்பமடைதல் பற்றி எல்லோரும் நிச்சயம் அறிந்திருப்போம். அது தொடங்கியது இன்று நேற்றல்ல… எப்போது மனிதன் தனக்கு இருப்பிடம் உருவாக்க காடுகளை அழிக்கத் துவங்கினானோ அப்போதே துவங்கிவிட்டது.

1800 களுக்கு பிறகு ஒவ்வொரு நூற்றாண்டும் பூமியின் சராசரி வெப்பம் 1.7° செல்சியஸ் அளவு கூடுகிறது.

எனில் இருபதாயிரம் ஆண்டுகளில் சிறிது சிறிதாக கடல் நீர் சூழத்தொடங்கியது…

பூம்புகார் நகரமும் மூழ்கத்தொடங்கியது…

ஆனாலும் அதனை மாற்றி மாற்றி கட்டமைத்து இருப்பினும் இயற்கையின் விதி மாற்ற முடியாதது அல்லவா…???

ஒரு சிறப்பான வளர்ந்த நகரம், சில ஆயிரம் வருடங்களில் இதோ கடலடியில்…, கடல் மடியில் துயில் கொண்டிருக்கிறது அமைதியாய்…

இன்னும் நூறு இருநூறு ஆண்டுகளில் சென்னை, மும்பை போன்ற நகரங்கள் மூழ்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எது நமைக் காக்கும்…!!!!! ………….

சரி வாங்க… நம்ம அனு, ஆதி, மித்ரன் மூனுபேரும் பாவம்….

எவ்ளோ நேரம் தனியா விட்டுட்டு வந்துட்டோம் பாருங்க….!!!!

அந்த பசங்க வேற அனு சொல்றத நம்பல…!!!!

என்னாச்சோ…!!!!

அங்கே…..

அந்த கதவு மிக பெரியதாய் மரத்தால் செய்யப்பட்டது. அதற்கு முன்னே காவலர் போல் தெரிந்த சிலர் நின்றிருந்தனர். அவர்கள் ஐரோப்பிய சாயல் வெள்ளை மனிதர்கள்.

மித்ரன் சென்று அவர்களில் ஒருவனிடம் ஆங்கிலத்தில் பேச்சுக்கொடுத்தான்… அவனோ தமிழில் “ நீங்கள் பேசும் மொழி புரியவில்லை” என்றான். “என்ன விளையாடுறீங்களா…!!இங்கிலீஷ் தெரியாதா…. ???” என்றான் சந்தேகத்தோடு. “எனக்கு தாய் மொழி லத்தீன்..!!!” கேட்பதற்கு மட்டுமே அவன் பதிலளித்தான். இதில் குழம்பிய அவன் “அப்போ நீங்க எந்த நாடு…??? இது எந்த நாடு..??” என்று வினவினான். “நான் யவனர் படைத்தலைவன்… இது சோழ நாடு…!!! பூம்புகார் நகரம்…!!!!” அவன் அமைதியாக பதில் பேசினான்.

இதைக்கேட்ட அவன் வெளிறிய முகத்துடன் வந்து இங்கே நண்பர்களிடம் விஷயத்தைக் கூறினான்.

“கிரேக்க, ரோமானிய மக்களை தமிழில் யவனர்ன்னு சொல்லுவாங்க…!!” தன் கருத்து உண்மை என உறுதியானதில் மகிழ்ச்சியோடு இதைச்சொன்னாள்.

“சரி உள்ளே போகலாம் வாங்க…!!” என்று எல்லாம் தெரிந்தவள் போல் முன்னே சென்றாள்.

“அரசர் வடநாட்டுக்கு படையெடுத்து போயிருக்கதால அங்க காவல் குறைவா இருக்கு…!!! உள்ளேபோய் விருந்தினர் விடுதியில் தங்கிக்கோங்க…” என்று அந்த யவனன் இவர்கள் மூவர் கையிலும் ஏதோ ஒரு ஸ்டாம்ப் செய்தான்.

உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்துவந்த மக்கள் அங்கே கூடியிருந்தனர். அதனால இவங்களோட கார்கோ ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டீஷர்ட் பெரிய விஷயமா படல போல…

அனு ஏதோ வெளிநாட்டு சுற்றுலா வந்ததுபோல் எல்லா இடத்தையும் சுற்றிக்கொண்டிருந்தாள்.

மித்ரன் மெல்ல நெருங்கி ஆதியிடம் “டேய்… என்னடா இது… பூம்புகார் ங்கிறான்… சோழநாடுங்கிறான்… அரசர் வடநாடு போயிருக்கரங்கறான்… ஒன்னும் நம்புற மாதிரி இல்லையே !!!” என்றான் பயத்தில்.

“எனக்கும் பயமா தாண்டா இருக்கு… இங்க எப்படி வந்தோம்னே தெரியல… இவளப்பாரேன்…” சொல்லிவிட்டு தொலைவில் ஏதோ கடையில் விலைபேசிக்கொண்டிருந்த அனுவை புன்னகையோடு பார்த்தான்.

“மச்சான்… இந்தப் பொண்ணுங்க எமலோகம் போனாகூட கடைத்தெருவ பாத்தா விட மாட்டாங்க போல….. காண்டாகுது… லூசாடா அவ…!!! எப்புடி டா வீட்டுக்கு போறது…!!! தப்பிக்கிற வழி என்ன…!!” என்று கோபப்பட்டான்.

ஆதி ஒன்றும் சொல்லாமல் யோசனையில் இருக்க… மித்ரன் “உனக்காச்சும் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட இருக்க… நம்ம ஊருக்கு போகலன்னா கூட இதுகூட இங்கேயே மகிழ்ச்சியா இருந்துடுவ… எனக்கு இன்னும் அதுமாதிரி நல்லது ஒன்னும் நடக்கலா டா…!!!!!” என புலம்பித்தள்ளினான்.

நீண்ட சிந்தனையில் இருந்து விடுபட்ட ஆதர்ஷ்… “மச்சா… கல்லு டா… அந்த கல்.. இந்திர நீலம்… அது எங்க போச்சு…!!!” என்று பரபரத்தான்.

இவன் என்ன எப்போ பாத்தாலும் கல்லு கல்லுன்னு உயிர வாங்குறான் என்று நினைத்த மித்ரன் “உன் வருங்கால மனைவி தான் வச்சிருக்காங்க… கடற்கரையில கூட பாத்தேன்…!!!” என்றான் அலுப்புடன்.

“அந்த அமெதிஸ்ட் தான் இதுக்கு காரணம் மச்சான்…!!” என்றான் சட்டென்று முடிவுக்கு வந்தது போல்.

“இந்திரநீலம் சரிதான்… அது அமெதிஸ்ட் இல்ல… அக்வா மரைன்… நீ ப்ரொபோஸ் பண்ணிட்டு இருக்கப்ப தப்பு கண்டுபிடிக்க வேண்டாம்னு விட்டுட்டேன்…” என்றான் கேலியாக.

“அப்படியா…!!” என்று சிரித்துவிட்டு “எதுவோ ஒன்னு… ஆனா நாம இங்க வந்ததுக்கும் அதுக்கும் கட்டாயம் தொடர்பிருக்கு…!!!” என்றான் ஆதி.

இந்த செய்தியை அனன்யாவிடம் சொல்வதற்கு அவளை நோக்கி நடக்கையில், அவளை பத்து காவல் வீரர்களுக்கு நடுவில் வைத்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.

ஆதியும் மித்ரனும் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றனர்……!!!!!!

தொடரும்…..

P.S : மேலே இருக்கும் படம் நான் வரஞ்சதாக்கும்…🙂😉👩🏻‍🎨

அனைத்து அத்தியாயங்களும் படிக்க

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments