விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 13

Pratheba Pratheba Follow Aug 07, 2020 · 2 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 13
Share this

அனன்யா தான் பார்த்தது என்னவென்று நிதானிக்க பத்து நிமிடம் பிடித்தது.

அவளுக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு இன்னும் மாறவில்லை.

இதுக்கும் நமக்கும் ஏதோ தொடர்பு இருக்குன்னு அவள் அப்போது உணர்ந்தாள்…..

இத்தனை நாளா அவள் மனக்கண்ணில் உருவகம் செய்துவைத்த நகரம் இதுவா… ?????

“என்ன அனு… இவ்ளோ நேரமா என்ன யோசனை…!!!! நாங்க பேசுறதுகூட காதுல வாங்கல நீ..!!!” என்று ஆதர்ஷ் கேட்டபோது அவள் அவன் பக்கம் திரும்பி வந்து கட்டிக்கொண்டாள்.

இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை…. ஒன்றும் புரியவுமில்லை…

“என்னாச்சுன்னு யாராவது எனக்கு சொல்றீங்களா ???” என்று மித்ரன் இடைமறிக்க…

இவன் வேற கரடிக்குட்டி என்று வாய்க்குள்ளேயே திட்டிவிட்டுத் திரும்பி, அனன்யா அவளுக்கு மனதில் பட்டதை விவரித்தாள்.

உடனே மித்ரன் கேலி செய்து சிரிக்க ஆரமித்தான். “தமிழ் பொக்கிஷம், மதன் கௌரி ன்னு யூடியூப் வீடியோவை எல்லாம் அதிகமா பாத்தா இப்படித்தான் தோணும்… தயவுசெஞ்சு நடக்குற விஷயத்தை பேசு அனன்யா…!!!” சிரித்து விட்டு சொன்னான் மித்ரன்.

“இல்ல மித்ரன் அண்ணா..!!! நம்புங்க நான் சொல்றத…!!!” என்றாள் அனு.

“ நீ என்ன நெனச்சுட்டு அனு…!! இப்போ நாம கடந்த காலத்துல இருக்கோம்னு சொல்ற அப்படித்தானே…!!!! அதுக்கு சாத்தியமே இல்ல குட்டி மா…!!!” ஆதர்ஷ் வந்து அவளிடம் விளக்கினான்.

“நீங்ககூட என்ன நம்ப மாட்டீங்களா…??? நான் படிச்ச ஒரு கற்பனைக் கதை கண்முன்ன நிக்குது…!!! எனக்கும் நம்ப முடியல தான்…!!! ஆனா இது உண்மை…!!!” அழுத்தமாய் சொன்னாள் தன் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அந்த நகரத்தை வெறித்தபடி….

தான் முன்பு சிரித்தது தவறென்று உணர்ந்து “அனன்யா….அது ஏதோ ராஜமௌலி படத்துக்கு போட்ட செட்டா இருக்கப்போகுது…!!! ரொம்ப சீரியஸ் ஆகாதீங்க ரெண்டுபேரும்…!!!!” மித்ரன் அமைதியாகப் பேசினான்.

“இப்போ இருக்க அறிவியல் வளர்ச்சியில் அதுக்கு வாய்ப்பே இல்லை…!!!! எதிர்காலத்துக்கு போறத பத்தின புரிதலோ, கோட்பாடுகளோ இருக்கு… ஆனா கடந்த காலத்துக்கு போக நீ சொன்ன மாதிரி கதைகளைப் படிக்கிறது தவிர வேற எந்த வழியும் இல்ல அனு…!!! இல்ல மாயம் மந்திரம்னு ஏதும் சொல்ல போறியா!!! எனக்கு புரியல டா….!!!!” என ஆதி வருத்தமாய் சொன்னவுடன்,

“நாம இங்கேயே பேசிட்டு இருந்தா புரியாது…!!! வாங்க அந்த ஊருக்குள்ள போவோம்…!!! அங்க போய் விசாரிச்சா தெரியபோகுது….!!!” ஆழமாக அவன் கண்களை பார்த்து தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்தாள் அனன்யா.

“சரி அனு… உனக்காக தான் எல்லாமே செய்றேன்… இதுவும் நீ அடம்பிடிக்கிறியேன்னு கூட வரேன்…” என்று அவள் தோள்மேல் கைபோட்டபடி நடக்க துவங்கினான் ஆதர்ஷ்.

இவள் முன்பே கூறியது போல அங்கே இருந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்… பெரும்பாலும் ஐரோப்பியர்…

ஆனால் அவர்கள் பேசுவது தமிழ் தான்… பத்தடி தொலைவில் இருந்து கேட்கும்போது தன் தோழி ரேஷ்மா பேசும் மலையாள மொழி கலந்த தமிழ் போல் தோன்றியது.

இன்னும் அருகில் சென்றபோது, அங்கே நெடிதுயர்ந்த கப்பல்… கரையோர துறைமுகத்திலிருந்து புறப்பட எத்தனித்து, பாய்மரம் விரித்து விடப்பட்டது.

அதில் தெரிந்த ஓவியம் மற்றும் தொம்மென்ற சத்தத்துடன் அறைந்த முரசு இரண்டும் அவள் சொன்னது சரிதான் என்று அடித்துக்கூறுவது போல் இருந்தது.

அவள் கண்முன் தெரிந்தது இருபது அடி உயரமும் ஏறத்தாழ முப்பதடி அகலமும் கொண்ட புலி…

கம்பத்தில் பறந்தது புலிக்கொடி… !!!!!!!!

அலைகடலை ஆடையாகவும், மழை பொழிவால் உண்டான காவிரியாற்றை கூந்தலாகவும் கொண்டு அமர்ந்திருக்கும் நிலமகள் போன்றதுவும்…

கதிரவன் விடியும் வரை ஒளிரும் கலங்கரை விளக்கு கொண்டதுவும்…

கூறை வேயா நிலாமுற்றம், சிறு மான் கண் போன்ற ஜன்னல்கள் கொண்டதுவும்,

அறியாமல் எவரும் உள்ளே புகமுடியாத யவனர் காவலால் காக்கப்படுவதும்,

பன்னாட்டு மக்கள் புலம்பெயர்ந்து கலந்து வாழும் நீர்சூழ் நகராகிய…

பூம்புகார்…

சிலப்பதிகார பாடலின் பொருள் முழுதாய் உணர்ந்தாள்… அவள் கற்பனையைக் காட்டிலும் அது நூறு மடங்கு இருந்தது…

“முட்டா சிறப்பின் பட்டினம்..!!! எவ்வளவு உண்மை அவங்க சொன்னது….!!!” என்று தன் மனதில் இவ்வளவு நேரம் ஓடிய எண்ணங்களின் இறுதியான வாக்கியத்தை வாய்விட்டு வெளியில் சொன்னாள் அனன்யா.

அனு ஒரு பக்கம் நினைக்கட்டும் மக்களே….!!!!

நாமளும் சிலது தெரிஞ்சுப்போம்….!!!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த லண்டன் மாநகரைக் காட்டிலும் ஆயிரம் மடங்குபெரியது காவிரிப்பூம்பட்டினம் என்று சில அறிஞர்கள் அந்நகரைப் பற்றி புகழ்ந்திருந்தனர்.

புலவர்கள் சொன்னது எல்லாமே பொய்ன்னு தான் நாம பல காலமா நினைச்சு நினைச்சு நம்ம முன்னோர் பத்தின வரலாறுகளைப் புறந்தள்ளி வச்சிருந்தோம்.

ஆனா கீழடின்னு ஒரு இடம்… அங்க தோண்டத் தோண்ட கிடைத்த புதையல்கள் போன்ற வரலாற்று பொக்கிஷங்கள் பல கிடைத்ததும் தான், தங்கத்தில் தாயக்கட்டை, தந்தத்தில் சீப்பு என்று சங்கப்பாடல்கள் சொன்னதெல்லாம் உண்மையென்று உணர்ந்தோம்.

அதுபோல் நம்ம சங்க இலக்கியங்கள் சொல்லும் உண்மைகளையும் கொஞ்சம் நாம் தேடத்தொடங்குவோம்.

பூம்புகார் பற்றி அவ்வப்போது பல கடலாய்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் முடிவுகள் தான் வெளிவருவது இல்லை.

முதல் சங்கம் நடந்தது தென் மதுரை, அடுத்தது கபாடபுரம், அப்புறம் மூன்றாம் சங்கம் தான் இப்போது உள்ள மதுரை. மீதம் இடங்கள் கடற்கோளில் அழிந்தன….

இது எல்லாமே உண்மை தான்….!!!

கடந்த இருபதாயிரம் ஆண்டுகளில் பூம்புகரின் எல்லையில் முப்பது கிலோமீட்டர் தொலைவு கடல் சூழ்ந்திருக்கு…!!!

சங்கப்பாடல்கள் சொன்ன பூம்புகார் கடலுக்குள் இருக்கு….!!!!

இன்னும் என்னவெல்லாம் இருக்கு….????

அடுத்த பதிவில்….!!!!!

தொடரும்….

அனைத்து அத்தியாயங்களும் படிக்க

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments