விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 11

Pratheba Pratheba Follow Aug 02, 2020 · 3 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 11
Share this

இரவு எட்டு மணி…. அக்கப்பலில் ஏறத்தாழ பதினைந்து பேர் இருந்தனர். அவர்களில் மைக்கேல் என்னும் வெளிநாட்டு அறிஞரும் ஒருவர். ஆழ்கடல் ஆய்வாளர் மற்றும் வரலாற்று எழுத்தாளர் கிரஹாம் ப்ருஸ் ஹென்காக்கின் குழுவில் இருந்தவர்.


குறிப்பு : கிரஹாம் ஹென்காக் என்னும் வரலாற்று எழுத்தாளர் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் புவியில் நிகழ்ந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக ஐஸ் ஏஜ் எனப்படும் உறைபனி காலம் முடிவுக்கு வந்ததன் விளைவுகளை ஆய்வு செய்துவந்தார்.

அதுவரை நீர்பரப்புக்கு மேலிருந்த பல நாகரிகங்கள், சிறிது சிறிதாக உருகிய பனிநீரால் கடலில் மூழ்கியதாகவும் ஒரு கோட்பாடு ஆதிகாலம் தொட்டே உலகில் உண்டு.

எல்லா மதங்களிளும், ஊழிக்காலத்தில் இறைதூதுவன் மக்கள் மற்றும் விலங்குகளை கப்பலில் ஏற்றிக்கொண்டு காப்பாற்றுவது போன்ற கதைகள் ஏராளமாய் உள்ளன.

இந்து மதமாகட்டும், கிருத்துவமாகட்டும் இன்னும் பல கலாச்சாரங்கள் அவற்றை நமக்கு எடுத்துரைக்கின்றன.

அவற்றை கருவாய்க் கொண்டு, உலகெங்கிலும் பல ஆழ்கடல் ஆய்வுகளில் ஈடுபட்ட அவர், பல ஆச்சர்யங்களை வெளிக்கொணர்ந்தார்.

கிரேக்க புராணங்களில் வரும் அட்லாண்டிஸ், தமிழ் நூல்கள் விவரிக்கும் குமரிக்கண்டம், சமஸ்கிருத மொழி சொல்லும் துவாரகை மற்றும் பல நம்ப முடியாத கதைகளில் மறைந்துள்ள உண்மை பின்னணியை தேடி அறியும் ஆவல் கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர் அவர். அவரைத் திருமணம் செய்துகொண்டவர் ஒரு மலேசிய தமிழ் பெண்.

அவரை ப்ஸ்யூடோ சயின்டிஸ்ட் என்று சொல்வார்கள். அதாவது அவர் கோட்பாடுகள் உண்மை அல்லது பொய் என்று அறுதியிட்டு கூற இயலாத நிலையில் இருப்பவை.

ராவணனுக்கு பத்து தலையென்றும், முருகனை ஆறுமுகன் என்றும், சீதையும் திரௌபதியும் ஆதிரையும் தீயில் குளித்து மீண்டனர் என்பதையும், அனுமன் சஞ்சீவி மலையை சுமந்ததையும் நம்பும் நாம் இவற்றை தாண்டி அறிவியலுக்கு மிக அருகில் இருக்கும் மேற்கண்ட அவரது கோட்பாடுகளையும் சிறிது காலம் நம்புவோம்….

இக்கதை முடியும் வரை…


பள்ளிக்கூடத்துல கூட வரலாறு நாங்கள்லாம் படிக்கல… இப்போ போய் இவ்ளோ நேரம் இந்த உரை ஆத்துறீங்களேன்னு நெனைக்கிறது புரியுது….

இப்போதைக்கு இவ்ளோ தெரிஞ்சுகிட்டா போதும். வாங்க கதைக்குள்ள போவோம்….

அந்த பதினஞ்சு பேர்ல இரண்டு வெளிநாட்டினர், நான்கு மீனவர்கள், நான்கு ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், கோவா வில் இருந்து மித்ரனுடன் வந்த இரண்டு ஆராய்ச்சி மாணவிகள் அப்புறம் நம்ம நண்பர்கள் மூணு பேர்.

ஆமாங்க அங்கே அனன்யாவுக்கு இரண்டு தோழிகள் கிடைச்சாங்க…

அவங்க பேரு கோதை மற்றும் இனியா.…

இரண்டு பேரும் அனன்யாவைப் போலவே பழைய நாகரிகங்கள் மேல மிகுந்த ஆர்வம்…

“இன்டர்ன்ஷிப்பில் உருப்படியா ஏதாச்சும் பண்ணனும்னு நெனச்சு இந்த ரிசர்ச் ஷிப் ல வந்து நிக்கிறோம்…!!!” தங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டபோது இனியா சொன்னாள்.

“நல்லாவே பேசுறீங்க…”சொல்லிவிட்டு சிரித்தாள் அனன்யா. பார்த்த மாத்திரமே நட்பு மலர்ந்துவிட்டது.

ஆதர்ஷ் அவளுக்கு நல்ல துணை கிடைத்துவிட்டதென்று கொஞ்சம் மகிழ்ந்தான் என்றாலும், தனிமையில் பேசும் வாய்ப்பு பறிபோனதை எண்ணி கொஞ்சம் வருந்தினான்.

அவளுக்கு தன்னோட கொஞ்சம் பெண்கள் கூட இருந்தா ஒரு சகஜ உணர்வு இருக்கும்.

இவன் கூட இருக்கும்போது அவ வேற மாதிரி இருக்கா… அமைதியா… மெல்லிய புன்னகையோடு…

அந்த தோழிகள் கூட்டத்தில் கலந்தால் தான் கலாட்டா எல்லாம் வெளில வருது…

இதுவும் நல்லாத்தான் இருக்கு… கூடவே இருந்தும் தூரமா நின்னு, அப்பப்போ பாத்துகிறது….

அவளுக்கும் அந்த எண்ணம் இல்லாமலில்லை….

இரவு பதினோரு மணி வரை அவனுடன் இருந்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றதும், தொழிகளோடு அறைக்குப் போக நடந்தபோது பலவித கலவையான உணர்ச்சிகள் வந்து அவளைச் சூழ்த்துகொண்டன.

“இன்னைக்கு முழுசும் இவன் கூடவே போயிடுச்சு…இப்போ விட்டுபோக மனசு என்னவோ போல இருக்கே…” நன்றாக ஒருமுறை ஆதி அறியாத வண்ணம் எட்டி அவனை பார்த்துக்கொண்டாள்….

“அவருக்கு தன் நண்பனை பாத்த மகிழ்ச்சி… நம்மை எங்க கண்டுக்க போறார்…!!!!” என்று சொல்லியவண்ணம் உள்ளே சென்றுவிட்டாள்.

இவற்றை எதிரில் இருந்த கண்ணாடி பிம்பத்தில் பார்த்து ஆதி… (அட… ஆதர்ஷ் தான்… அனுவும் செல்லமா கூப்பிட ஆரமிச்சுட்டா….) திரும்புவதற்குள் உள்ளே சென்றுவிட்டாள்.

நாயகன் அவன் நெஞ்சம்… கொஞ்சம்…. மகிழ்ந்ததே… கேளடீ…தோழீ…!!!!!

“நான் உங்கள பாத்தேன்…” தன் கைபேசியெடுத்து குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“நானும் பாத்தேன்…😉” அவனிடமிருந்து வந்த செய்தி ஒளிர்ந்தது.

அப்புறம் தான் அங்கிருந்த கண்ணாடிகள் நினைவு வந்தது….

“என்ன நெனச்சுருப்பார் என்ன பத்தி…!!” அவள் தலையில் கைவைத்துக்கொண்டாள்.

“என்ன பதிலே காணும்… ஒரு நிமிஷம் வெளில வரியா…” ஆதி அடுத்த குறுஞ்செய்தி அனுப்பினான்.

உள்மனம் படபடவென்று அடித்துக்கொள்ள “இல்ல… வேணாமே… எனக்கு இருட்டுன்னா பயம்…” தவிற்பதற்கென்றே ஏதோவொரு காரணம் சொன்னாள்.

உண்மை என்னவெனில் அந்நேரம் அவள் அசடுவழிவதை அவன் பார்க்க வேண்டாம் என்பதாலேயே…

மறுபடி ஆதியிடமிருந்து வாய்ஸ் மெஸேஜ் ஒன்று வந்து அவள் தொலைபேசி மின்னியது…. அதை திறந்ததும் “பொய் சொல்லக் கூடாது காதலி…(ரன் படப்பாடல்) நான் ஷிப் டெக்கில் வெய்ட் பன்றேன்… ஒழுங்கா வா…” அவன் கராராகப் பேசினான்.

மெதுவாக கப்பல் அசைந்தாடி சென்றது. இவள் ஆதி சொன்ன இடத்திற்குச் சென்றபோது அங்கு யாருமின்றி திடுக்கிட்டாள்..

சட்டென்று ஒரு மின்னல் வெட்ட, அவள் பின்னோக்கி நகரும்போது யார்மீதோ இடித்துக்கொண்டாள்.

“ஆதி… இது என்ன விளையாட்டு…!!!” என்று திரும்பியபோது அங்கு நின்றது மித்ரன்.

“நீங்… நீங்க என்ன இங்க…!!!!! ஆதி இங்க எனக்காக காத்திருக்கதா சொன்னாரே…. எங்க போயிட்டாரு…???” என்றாள் படபடப்பாக…

அப்போது மித்ரன் பின்னே ஏதோ விளக்கு வெளிச்சம் போல் தெரிய அந்த திசை நோக்கினாள்.

அங்கே… ஆதி… கைகளில் ஏதோ சிறிய பொருள்….

கோதையும் இனியாவும் கைபேசி விளக்கின் ஒளியை அவன் மீது பாய்ச்ச… அவன் மண்டியிட்டு மூடியிருந்த கைகளைத் திறந்தான்….

அங்கே ஒளிவீசும் ஒரு பொருள்…அவள் சில வருடங்களுக்கு முன்பு அவன் மீது வீசிய அதே கல்…

ஆச்சர்யத்தில் வாய் திறந்தவள் பேச்சு வராமல் திணறினாள். ஏனெனில் அந்த இரவிலும் கூட அலைகடல்போல் நீலமும், விண்மீன் போன்ற ஒளியும் பொருந்திய கல்…..

“என்ன மோதிரம் குடுத்து வாழ்நாள் பூரா துணையிருப்பியான்னு கேட்பாங்க… நீங்க வாழ்நாள் பூரா என்கிட்ட அடிவாங்க தயார்ன்னு சொல்றீங்களா…???” அவள் சிரித்தாள்…

“அது தெரிஞ்சுதானே வந்து மாட்டிக்கிட்டேன்…

இது அமெதிஸ்ட்… தமிழில் இந்திரநீலக்கல்….

ஏன்சியன்ட் க்ரீக் பீபில் இதை கடல் பயணங்கள்ல ரொம்ப ராசியானதுன்னு வச்சுப்பாங்க… சைலர்ஸ்க்கு லக்கி ஸ்டோன் இது…!!!!

உனக்கு இந்த நாட்கள் வெற்றியோடு மட்டுமில்லாம மறக்க முடியாததாவும் இருக்கணும்…. அதுக்கு தான் இந்த பரிசு…!!!

வாழ்நாள் முழுதும் என்ன கண்கலங்காம பாத்துப்பியா அனு…!!???” கண்ணில் குரும்புடன் கேட்டான்.

“லவ் யூயூயூ….” கீழே அவளும் அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

முதலில் அவனுக்கே கேட்காமல் சொன்னவள், இப்போது நண்பர்களுக்கு நடுவில் வைத்து இவ்வாறு நடந்துகொண்டது அவனுக்கு வியப்பை தந்தது.

தூரத்தில் ஒரு மின்னல் மின்ன… அவனிடமிருந்து அக்கல்லை அனு வாங்கிக்கொள்ளும்போது இருவர் கைகளுக்கும் நடுவில் அது மிக ரம்மியமாய் ஒளிர்ந்தது…..

கடலில் சட்டென்று ஒரு மாற்றம்… கடுமையான சுழல் ஒன்று தோன்றி இவர்கள் கப்பலை விரைவாய் நெருங்கத் தொடங்கியது….

தொடரும்….

அனைத்து அத்தியாயங்களும் படிக்க

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments