விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 1

Pratheba Pratheba Follow Jul 20, 2020 · 2 mins read
விழி ஈர்ப்பு விசை - அத்தியாயம் 1
Share this

அன்று அதிகாலை 10 மணிக்கு அவள் அப்பா அம்மா இருவரும் அறைக்கு வந்து கதவு தட்ட முயன்றபோது கதவு லாக் செய்யப்படாமலேயே இருந்தது.

அது மதுரையின் புறநகர் பகுதி…

மேலூர் தாண்டி விக்ரம் ஹாஸ்பிடல் அருகில் நல்ல பெரிய வீடு..

அப்பா ஒரு அரசாங்க உயர்பணியில் இருப்பவர். அம்மா ஹோம் மேக்கர்.

எப்போதும் 6 மணிக்கெல்லாம் எழுந்து விடுவாள். இன்று என்ன இவ்வளவு நேரம் தூக்கம்…

இரவு தாமதமாக வந்தாள், அத்தோடு நில்லாமல் நெடுநேரம் மெசேஜ் செய்து கொண்டிருந்திருப்பாள்… அதான் இவ்வளவு நேரம் தூங்குறா போல…. அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த மகளின் தலையணைக்கு அருகில் ஒரு மரப்பெட்டியை வைத்து விட்டு சத்தம் செய்யாமல் சென்று விட்டனர்.

கொஞ்சம் புரண்டு படுத்தவள், கையில் ஏதோ தட்டுப்பட அதை திறந்து பார்த்தாள்.

அது ஒரு அழகான மரப்பெட்டி. ஒரு முறை எக்ஸிபிஷன் சென்றபோது அவள் வேண்டும் என்று கேட்டு அம்மா முடியாது போடி என்று சொல்லிவிட்டார்.

ஆனால் இன்று அதே பெட்டி… அதற்குள் பக்கத்து அறையின் சாவி வைக்கப்பட்டிருந்தது.

“ஏதோ ப்ளான் பண்றாங்க போல” என்று மனதில் யோசித்துக்கொண்டே தூக்கக் கலக்கத்தோடு அடுத்த அறைக் கதவைத் திறந்தாள்.

திறந்ததும் பாக்ஸ் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்க்கும் ஆவலில் கிட்டத்தட்ட குதித்துக் கொண்டே சென்றாள்.

திறந்தால் அவள் கேட்ட அதே கேமரா… அதே மாடல்… அதே ஸ்பெசிஃபிகேஷன்… இன்னபிற அக்சஸரீஸ்… கிட்டத்தட்ட அசந்து போனாள்… எப்போதுமே அவள் கேட்கும் எதையும் உடனடியாக வாங்கித் தருவதில்லை அவள் வீட்டில்…

ஆனால் இந்த முறை மனதில் நினைத்தது எல்லாமே வந்துவிட்டது. என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வெளியில் வந்தாள். “ அம்மா, என்ன இங்கே நடக்கறது எல்லாம் எனக்கு ஒன்னும் சரியா படலையே…!!!” என்றாள் சந்தேகப் பார்வையோடு…

“ அது ஒண்ணும் இல்ல டி… சும்மா தான்…”

“எனக்கு பாத்தா அப்படி தெரியலையே…”

“போன வாரம் நம்ம குலதெய்வ கோவிலுக்கு போனோம் இல்ல…. அங்கு கூட நம்ம ஒரு ஆன்ட்டி பார்த்தோமே..” என்றாள் அம்மா.

“ஆமா… அந்த குண்டு ஆன்ட்டியா !!! ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்களே….” என்றாள் சலிப்புடன்.

“எரும … அப்படில்லாம் சொல்லக்கூடாது… பெரியவங்கள்ல… !!“

“ மம்மி…இதெல்லாம் உன்னோட வச்சுக்கோ !!!” என்றாள் முறைத்துக்கொண்டே.

“ சரி போடி நீயும் உன் கொள்கையும்… அவங்களோட அக்கா வந்து ஹிஸ்டரி ப்ரொபசர் ஆம்… அவங்க வீட்டுக்காரர் பிசிக்ஸ் ப்ரொபசர் ஆம்”

“ மேல சொல்லு மேல சொல்லு…. நீ எதுக்கு வர அப்படின்னு எனக்கு தெரியாதா அமுதா ??”

“ஏய் போடி நான் உன் கிட்ட சொல்லல… என்னங்க நீங்க கேளுங்க… இது ரொம்ப நல்ல சம்மந்தம் எப்படியாவது முடிச்சுடலாமே ??”

“ தகப்பா அம்மா பக்கம் சாயாத… நான் டாக்டரேட் வாங்கி தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டேன்… ”

“ நீ பி.எச்.டி முடிகிற வரைக்கும் என்னால பொறுமையா இருக்க முடியாது….. இப்பவே 27 ஆச்சு இதுக்கு மேல நல்ல மாப்பிள்ளை கிடைக்காது…”

“மா… ஏன் இப்படி படுத்துற… “

“சரி இதுதான் கடைசி… இனிமே நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்க மாட்டேன்… இந்த இடம் செட் ஆகாம இருந்தால் உன் விருப்பப்படி நீ போ…”

“ஆஹான்…. அதெல்லாம் முடியாது… நீ மட்டும் மாப்பிள்ளைய வரச்சொல்லிப்பாரு…

அப்புறம் தெரியும் என்ன பத்தி…

பொண்ணு பார்க்க யார் வந்தாலும் கல்ல விட்டு அடிச்சிடுவேன்… உயிருக்கு உத்திரவாதம் இல்லை… சொல்லிட்டேன்…”

“பெரிய குஷி பட ஜோதிகா… இன்னும் ஏன் சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிற ?? பார்த்தா உனக்கே பிடிக்கும்… நானும் அண்ணனும் பேஸ்புக்ல பார்த்துட்டோம்…”

“ஹேய் அவன் அமெரிக்கால இருந்தாலும் வேற பொழப்பே இல்லையா… பொண்டாட்டி புள்ள எல்லாரையும் விட்டுட்டு உங்க கூட சேர்ந்து எனக்கு ஆப்பு வச்சுட்டு இருக்கானா.. நான் அண்ணி கிட்ட பேசிக்கிறேன்”

“ சரி என்னமோ பண்ணி தொல… பையனோட ஃபேஸ்புக் ஐடி ஆதர்ஷ் பொன்மாறன்”

“ஆஹான்னானா… இப்படி எல்லாம் சொல்லிட்டா நாங்க பாத்துருவோமா… அஹெம்… அஹெம்… தண்ணிய குடி…”

இதைகேட்டதும் அம்மா முணுமுணுத்துக்கொண்டே கிச்சனுக்குள் போய் வேலையில் மூழ்கிவிட்டார்…

“ சரி பாப்போமே… பார்த்தவுடனேயே லவ்வா வரப்போகுது…. நமக்கும் லவ்வுக்கும் எப்பவுமே செட்டாகாது…” என்று நினைத்துக்கொண்டாள்…

அவ முரட்டு சிங்கிள்ன்னு வெளியில் சொல்லிக்கிட்டாலும் அவளுக்கு ஒரு ஆர்வம் உள்ள இருக்கும்.

லவ் எப்பவுமே தப்புன்னு வாய் சொல்லும் ஆனா லவ் பண்ற பிரண்ட்ஸ் பார்த்தா கொஞ்சம் பொறாமையா இருக்கும்.

அவள் தன் மொபைலை எடுத்து அவன் ப்ரோபைலை தேட ஆரம்பித்தாள்.

தொடரும்………..

Pratheba
Written by Pratheba Follow
கொஞ்சம் கவிதைக்காரி, நிறைய கனவுக்காரி, தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி

Like/Comments