கி.ரா வின் வேதபுரத்தார்க்கு…

நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு புத்தகம்…
என் தந்தையின் நண்பர் எங்களுக்கு திருமண பரிசாக அளித்தது… திருமணத்திற்குப்பிறகு கிடைத்த சிறுசிறு பொழுதுகளில் கொஞ்சம் சிந்திக்கவைத்த புத்தகம்….
திரு.கி. இராஜநாராயணனின் படைப்பு… வாழ்க்கையைப்பற்றி ஒரு வாழ்ந்த மனிதர் தெக்கத்தி மொழியில் எழுதிய நூல்… முன்பு இவரின் சிறுகதைகள் படித்ததுண்டு…சில… பள்ளிப்புத்தகத்தில்…, சில… இணையத்தில்… இது கொஞ்சம் வித்தியாசமான… ஆத்மார்த்தமான பதிவு…

” எனக்கு நினைவு என்பது எனது எழுத்துக்கள் தான்…” என்று நூலை முடிக்கிறார்… யதார்த்தம் நூல்முழுவதும் நிறைந்துள்ளது… நல்ல புத்தகம்… படிக்கும் ஆர்வத்தைக்கூட்டும் என்பதை இதன் மூலம் உணர்கிறேன்…. கி.ரா வின் வேதபுரத்தாற்கு….